டெல்லி: இந்தியா, 06 மே 2024 – கனடாவில் உயர்கல்வி திட்டங்களில் சேர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு அவர்களது பயணத்தில் ஆதரவளிக்க ஒரு புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதை TD வங்கியும் மற்றும் அப்ளைபோர்டு செயல்தளமும் மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றன. மாணவர்களது இடநகர்வுக்கு உதவும் முன்னணி தளமான அப்ளைபோர்டு சொத்துக்களின் அடிப்படையில் வடஅமெரிக்காவில் 6வது பெரிய வங்கி மற்றும் கனடா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாகத் திகழும் TD உடன் கூட்டுமுயற்சியில் இணைகிறது. கனடாவில் கல்வி பயில தடங்கலற்ற மாறுகைக்கு அவர்களுக்குத் தேவைப்படும் ஆதாரவளங்கள் மற்றும் கருவிகளை மாணவர்களுக்கு வழங்குவதே இந்த ஒத்துழைப்பு நடவடிக்கையின் நோக்கமாகும்.
TD சர்வதேச மாணவருக்கான உத்தரவாத முதலீட்டு சான்றிதழ் (GIC) திட்டத்தின் வழியாக, கனடாவில் உயர்கல்வி திட்டத்தில் சேர திட்டமிடும் மாணவர்கள், அவர்களது கல்வி அனுமதி விண்ணப்பத்திற்கான வெற்றிகர வாய்ப்பை மேம்படுத்திக்கொள்ள முடியும். அப்ளைபோர்டு தளத்தின் பாதுகாப்பான மற்றும் அந்தரங்க தொழில்நுட்பம், ApplyProof வழியாக கல்விக்கான அனுமதி விண்ணப்பங்களை வலுப்படுத்த சரிபார்த்து உறுதிசெய்யக் கூடிய நிதிசார் ஆதரவின் சான்றினை வழங்குகிறது.
TD பேங்க் குழுமத்தின் கனடியன் பர்சனல் பேங்கிங் துறையின் செயலாக்க துணைத்தலைவர் சோனா மேத்தா, இது தொடர்பாக கூறியதாவது: “கனடாவில் கல்விக்கான அவர்களது பயணத்தை தொடங்க விரும்பும் உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களது பயணத்தை எளிதாக்குவதற்காக நாங்கள் செயலாற்றி வருகின்ற நிலையில் அப்ளைபோர்டு உடன் இந்த ஒத்துழைப்பு உறவு குறித்த செய்தியினை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் உற்சாகம் கொள்கிறோம். வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கான செயல்முறையை வெற்றிகரமாக பூர்த்தி செய்வது சவால் நிறைந்தது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். தங்களது நாடுகளிலிருந்து கனடா நாட்டின் வங்கி சூழலுக்கு தடங்கலற்ற நிலைமாற்றத்தை ஏதுவாக்குவதற்கென வடிவமைக்கப்பட்ட கருவிகள், செயல்திட்டங்கள் மற்றும் நம்பகமான ஆலோசனையை வழங்குவதன் மூலம் கனடாவிற்கு வருகை தரும் சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவளிப்பதில் TD வங்கியில் உள்ள நாங்கள் வலுவான பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம்.”
“கனடா நாட்டு குடிமக்களுக்கு நிதிசார் தீர்வுகளை வழங்குவதில் 150 ஆண்டுகளுக்கும் அதிகமான பாரம்பரியத்தை TD கொண்டிருக்கும். நிலையில் மாணவர்களின் இடநகர்விற்கான முன்னணி செயல்தளமாக அப்ளைபோர்டு இயங்கி வருகிறது. தங்களது கல்வி முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவையும், வழிகாட்டலையும் எங்களது இந்த கூட்டுமுயற்சியின் மூலம் சர்வதேச மாணவர்கள் பெறுவார்கள் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். சர்வதேச மாணவர்களது பயணம் நெடுகிலும், அவர்கள் திறனதிகாரம் பெறுமாறு செய்வதிலும் கனடாவில் வெற்றிகரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதிலும் நாங்கள் இருவரும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்போடு செயல்படுகிறோம்.”
ஒரு எளிய, டிஜிட்டல் செயல்முறை வழியாக விண்ணப்ப கட்டணம் ஏதுமின்றி TD வங்கியுடன் ஒரு GIC – ஐ இந்திய மாணவர்கள் தொடங்க முடியும். கனடாவில் அவர்கள் வந்து சேர்வதற்கு முன்னதாகவே GIC தொகைக்கான வட்டியை அவர்கள் ஈட்டத் தொடங்குவார்கள். TD இன்டர்நேஷனல் ஸ்டூடண்ட் GIC செயல்திட்டமானது, TD ஸ்டூடண்ட் செக்கிங் அக்கவுண்ட் என்பதையும் மாணவர்களுக்கு வழங்குகிறது. இதற்கு மாதாந்திர கட்டணம் எதுவுமில்லை (நிபந்தனைகள் பொருந்தும்). வரம்பற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், கூடுதல் சலுகைகளைப் பெறவும் முடியும். கனடாவில் வந்து சேர்ந்ததற்குப் பிறகு, நாட்டில் மிக நீளமான வங்கிக்கிளை பணி நேரங்களை கொண்டிருக்கின்ற TD – ன் 1000+ கிளை வலையமைப்பின் வழியாகவும் மற்றும் 80-க்கும் அதிகமான மொழிகளைப் பேசும் வங்கிச் சேவைக்கான ஆலோசகர்கள் வழியாகவும் மாணவர்கள் பயன் பெறலாம்.
கனடா அரசின் ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS) செயல்திட்டத்திற்கு தகுதிநிலை கொண்டிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்கு உதவுவதற்கென இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2024 ஜனவரி 1-ம் தேதி வரை தங்களது கல்வித் திட்டத்திற்கான அனுமதி விண்ணப்பத்தின் ஒரு அங்கமாக மாணவர்கள் கண்டிப்பாக காட்ட வேண்டிய குறைந்தபட்ச நிதி அளவு என்பது, $20,635 கனடியன் டாலர்களாகும்.
அப்ளைபோர்டு வழியாக TD இன்டர்நேஷனல் ஸ்டூடண்ட் GIC புரோகிராம் வழியாக அதிகம் அறிய, காணவும்
www.applyboard.com/services/td-student-gic-program.
Leave a Reply