மூவிலயா பிக்சர்ஸ் ஜாகிர் ஹூசைன் இஸ்மாயில் தயாரிப்பில், செங்கை தமிழன் ராஜேஷ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “மாயவன் வேட்டை”!

இத்திரைப்படத்தில் கீழக்காடு, பற்றவன், ஆன்மீக அழைப்பு திரைப்படங்களில் வில்லனாக நடித்த சிக்கல் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்வாணிஸ்ரீ, திவ்யபாரதி, டார்த்தி போன்றோர் நடித்துள்ளனர்.

பெரியசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். முகமது அசாருதீன் இசைய அமைத்துள்ளார். மணிகுமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

கடலூர் சுற்றுவட்டார பகுதியில் 35 நாள்கள் நடந்த படபிடிப்பில், இரவு பகலாக தொடர்ந்து நடித்துள்ளார் 10 வயது கதாநாயகி டார்த்தி. மேலும் ஜின்னாக நடித்த சிக்கல் ராஜேஷ் தினசரி 16 மணி நேரங்கள் ஒப்பனை செய்து, தொடந்து நடித்துள்ளார்.

மாயவன் வேட்டை திரைப்படமானது இஸ்லாமிய புனித நூலான குரானில் சைத்தான்கள் என்று அழைக்கபடும் ஜின்கள் பற்றியும் ஜின்கள் படைப்பு ரகசியம், மற்றும் அதன் கோவத்தால் மனிதர்களை அழிக்க எடுக்கும் முயற்சிகளையும், அதை எதிர்கொள்ளும் மனிதர்களின் போராட்டங்களையும் விளக்கும் Mythological horor திரைப்படமாக உருவாகியுள்ளது!

உலக திரைப்படங்களில் இதுவரை யாரும் சொல்லாத ஜின்கள் பற்றிய ஆன்மீகத்திற்கும் , அறிவியலுக்குமான தொடர்பை சொல்லும் படமாக ‘மாயவன் வேட்டை’ மே மாதம் 10’ம் தேதி திரைக்கு வருகிறது!

Leave a Reply

Your email address will not be published.