எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் சார்பில் முத்துக்குமார், மற்றும் செல்வம் தயாரிக்க, யாஷிகா ஆனந்த், பிரஜின் , ஜார்ஜ் மரியான், முத்துக்குமார்  , பாலாஜி, லொள்ளுசபா மனோகர், தர்ஷினி  நடிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கி இருக்கும் படம். 

காதலனை நம்பி ஒரு பெண் ( தர்ஷினி) நெருக்கமாக இருக்க, அது இன்னொருவன் செல்போனில் இருந்து வாட்ஸ் அப் வீடியோவாக அவளுக்கே வருகிறது . அவன் பணம் கேட்பதோடு பலரிடம் படுக்கச் சொல்ல, அவர்களை சந்திக்கும் அந்தப் பெண் காதலனாக நடித்து ஏமாற்றியவனிடம் நியாயம் கேட்க,  அவளை அடித்துக் கொல்கின்றனர். 

நடிகை ஸ்ரீஜா ( யாஷிகா ஆனந்த்) ஒரு படப்பிடிப்புக்காக ஏற்காடு வந்திருக்க , அவளை பேட்டி காண வரும் லோக்கல் டிவி ரிப்போர்ட்டர் ( முத்துக்குமார்) அவளோடு உறவு கொண்டு அதை வீடியோவாக எடுக்க முயல, அந்த முயற்சியில்  ஹோட்டல் பேரரை அவன் கொல்லும்போதுதான் அவனது கொடூரம்  புரிகிறது . 

அவனிடம் இணங்குவது போல நடிக்கும் நடிகை ஸ்ரீஜா ஒரு நிலையில் அவனையே அடித்து வீழ்த்துகிறாள் . “நீ என்ன குறி வச்சு வரலடா.. நான்தான் உன்னை குறிவச்சு வர வச்சேன் ” என்கிறாள் . ஏன் எதற்கு எப்படி  அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் . 

பெண்களை நம்ப வைத்து உறவு கொள்ளும் போது ஆபாசப்படம் எடுத்து அதை வைத்து மிரட்டி அவளிடம் பணமும் பிடுங்குவதோடு பலரிடமும் காமத்துக்கு அனுப்பி அதை வைத்து பல வகையிலும் பணம் அதிகாரம் என்று வாழும் கும்பல் பற்றிய படம் . 

பொள்ளாச்சி பாலியல் குற்றங்களின் இன்ஸ்பிரேஷனில் எழுதி இருக்கிறார்கள். யாஷிகா ஆனந்த் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். பிரஜின் தனது பங்கை கச்சிதமான நடிப்பில் கவர்கிறார்

படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி இந்த படிக்காத பக்கங்களை படிக்கத்தக்க வகையில் கவர்ச்சியாகவும் அழகாக கொடுத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.. இந்த படத்திலும் நடிகை ஸ்ரீஜா என்ற பெயரில் நடிகையாக வருகிறார்..

கவர்ச்சியிலும் நடிப்பிலும் மிரட்டி இருக்கிறார் யாஷிகா ஆனந்த். கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின் இடைவேளை நெருங்கும்போது தான் வருகிறார்.. வந்த பிறகு நாயகிக்கு உதவும் கேரக்டரில் தன்னால் முடிந்த உதவியை செய்து இருக்கிறார்..

இவர்களுடன் வில்லன் கும்பலைச் சேர்ந்த முத்து, எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கின்றனர்.

சைக்கோ வில்லன் முத்துக்குமரன் மிரட்டி இருக்கிறார்.. அதுபோல ஆதங்க பாலாஜி மற்றும் தன்ஷிகா உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்துள்ளார்… பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.. இந்த படத்தை எஸ் மூவி பார்க் & பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஆக இந்த படிக்காத பக்கங்கள்.. படிக்க வேண்டிய பக்கங்கள்..

Leave a Reply

Your email address will not be published.