கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி என் அன்புசெழியன்,,சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், சுவாமிநாதன், மனோபாலா, சேசு, மாறன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’
அநாதையான நாயகன் சந்தானம் தனக்கு திருமணத்துக்கு பெண் பார்க்கிறார். சொந்தமாக வீடு இருந்தால் பெண் கிடைக்கும் என்பதால், ரூ.25 லட்சம் கடன் வாங்கி வீடு வாங்குகிறார். வசதியான பெண்ணை திருமணம் செய்து அந்த கடனை அடைத்துவிடலாம் என நினைக்கிறார்.
ஒருவழியாக மனோபாலா மூலமாக ஜமீன் வீட்டு சம்பந்தம் கிடைக்கிறது சந்தானத்திற்கு .ரத்தினபுரி ஜமீனாக இருக்கும் தம்பி ராமையாவுக்கு . மூத்த மகன் பாலசரவணன், இளைய மகள் ப்ரியாலயாவும் இருக்கிறார்கள்.. பெண் பார்க்க வரும் சமயத்தில், ஜமீனின் வரவேற்பைப் பார்த்து சந்தானம் மலைத்துப் போக, அன்றைய தினமே சந்தானத்திற்கும் ப்ரியாலயாவிற்கும் திருமணம் நடைபெறுகிறது.
திருமணம் நடந்த பிறகு ரத்தினபுரி ஜமீன் பத்து. கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருக்கிறது என தெரிய வருகிறது. இதற்கிடையில் மும்பையில் தீவிரவாத கும்பல் ஒன்று தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்த்துகிறது இதற்கிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டுகிறார்கள். இறுதியில் நாயகன் சந்தானம் தன் கடனை அடைத்தாரா? இல்லையா? தீவிரவாதிகள் பிடிபட்டார்களா இல்லையா.?? என்பதே ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் மீதிக்கதை.
வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் சந்தானம் தோன்றும் இடங்களிலெல்லாம் காமெடியை கதிகலங்க வைக்கிறார். தம்பி ராமையாவை கலாய்க்கும் இடங்கள் அனைத்தும் படத்தின் காமெடி ஓட்டத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் பிரயாலயா தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். பாலசரவணன், தம்பி ராமையா, மாறன், விவேக் பிரசன்னா, மறைந்த மனோபாலா என படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டி .இமானின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது . பின்னணி இசை படத்திற்கு துணை நிற்கிறது. ஓம் நாராயணன் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.
ரசிகர்களை நகைச்சுவையால் மூழ்கடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் நாராயண் முதல் பாதியில் இருந்த ஒரு கலகலப்பு இரண்டாம் பாதியில் சற்று குறைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘இங்க நான் தான் கிங்கு’ காமெடி திருவிழா
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள்: சந்தானம், ப்ரியாலயா, தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், சுவாமிநாதன், மனோபாலா, சேசு, மாறன்
இசையமைப்பாளர் : டி இமான்
இயக்கம்: ஆனந்த் நாராயண்
மக்கள் தொடர்பு ; நிகில் முருகன்
Leave a Reply