சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் செல்வராஜ் தயாரிப்பில்  மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன்  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கன்னி

மலைப்பாதையில்  பயணிக்கும்  நாயகி  அஷ்வினி தன்னுடன்  அண்ணன் மகள் கைக்குழந்தை மற்றும்  ,பள்ளி செல்லும் வயதுச்சிறுமி என இருவரையும் அழைத்து கொண்டு மலை உச்சியில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு செல்கிறார்.

தாத்தா  வீட்டில் இருக்கும்  அஸ்வினி சந்திரசேகரை கொலை செய்வதற்காக ஒரு கும்பல் அந்த கிராமத்திற்கு வருகிறது. அஸ்வினியை கொலை செய்து அவரிடம் இருக்கும் ஒரு பொருளை எடுப்பதற்காக அங்கு வருகிறது.இறுதியில் நாயகி அஸ்வினியை கொலை செய்ய வந்த  கும்பல் யார்? எதற்காக அஸ்வினியை கொலை செய்ய வருகிறார்கள் அப்படி அஷ்வினியிடம் இருக்கும்  பொருள் என்ன? எனபதே  ‘கன்னி’  படத்தின் மீதிக்கதை..

சேம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வினி சந்திரசேகர். தோற்றம், நடிப்பு , உடை, உடல் மொழி என அனைத்திலும்  அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தின் முழு கதையையும் தன தோல் மீது சுமந்து நிற்கிறார்.

இதுவரை வில்லனாக பல படங்களில் நடித்த மணிமாறன் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். அவரது மனைவி நீலிமாவாக வரும் தாரா கிரிஷ்  மிக அற்புதமாக நடித்திருக்கிறார். .

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வரும் ராம் பரதனும்  கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். இவர்களை தவிர ப்தாஹத்தில் நடித்த நடிகர்களும் கிராம மக்களும் மிக இயல்பாக நடித்து இருக்கிறார்கள்.  

செபாஸ்டியன் சதீஷின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.ராஜ்குமார் பெரியசாமி ஒளிப்பதிவு  காட்டு மற்றும் மலை பகுதிகளை அழகாக காட்சிப்படுகிறார்.

இயற்க்கை வைத்தியத்தை மைய கருவாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் மாயோன் சிவா  தொரப்பாடி  சித்த மருத்துவத்தின் மகிமை பற்றிப் பேசி இருக்கிறார் . கார்ப்பரேட் நிறுவனம் நம் பாரம்பரியத்தை வணிகப்படுத்தும் முயற்சியில் இருப்பதும் சொல்லப்படுகிறது படத்தின் முதல்  பாதிக் கதையை மட்டும் பார்த்துவிட்டு இதன் முழுக் கதையை யூகித்து விட முடியாது. இரண்டாவது பாதி படத்தைப் பார்த்தவர்களுக்குதான் கதை புரியும்

மொத்தத்தில்  ‘கன்னி’  இயற்கை மருத்துவம்

மதிப்பீடு : 2..5 / 5

நடிகர்கள் : அஸ்வினி, மணிமாறன், தாரா க்ரிஷ், ராம்பரதன்  ஜான்வி சரிகா செல்வராஜ்,

இசை : செபாஸ்டின் சதீஷ்

இயக்கம் : மாயோன் சிவா தொரப்பாடி

மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்

Leave a Reply

Your email address will not be published.