புஷ்பாராஜை சந்திக்கும் ஸ்ரீவள்ளி…ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்திருக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சூடானா… (கப்புள் பாடல்)’ அறிவிப்பு புரோமோ இப்போது வெளியாகியுள்ளது!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இதன் டீசர் மற்றும் முதல் சிங்கிளான ‘புஷ்பா…புஷ்பா’ பாடல் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை இன்னும் இரண்டு மடங்காக்கியுள்ளது. ‘புஷ்பா: தி ரூல்’ படத்தின்  இரண்டாவது சிங்கிள் ‘சூடானா…(கப்புள் பாடல்)’ அறிவிப்பு ராஷ்மிகா இருக்கும் புரோமோவுடன் வெளியாகியுள்ளதால் ரசிகர்களை உற்சாகமாகியுள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராஷ்மிகா, ஸ்ரீவள்ளியாக மாறும் சுவாரஸ்யமான காட்சிகளுடன் இந்த புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘புஷ்பா1’ படத்தில் புஷ்பா மற்றும் ஸ்ரீவள்ளி கதாபத்திரங்களுக்கு இடையேயான காதல் பாடலாக ‘சாமி சாமி’ ஹிட்டடித்தது. அதே போன்ற காதல் பாடலாக ‘சூடானா…’ இருக்கும் என இந்த புரோமோ உறுதியளிக்கிறது.

இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரேயா கோஷல் பாடியிருக்க, சந்திர போஸ் பாடலை எழுதியுள்ளார். படத்தின் இசை உரிமையை டி-சீரிஸ் கைப்பற்றியுள்ளது.

‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் இருந்து வெளியான ‘புஷ்பா புஷ்பா’ பாடல் சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கானது. அல்லு அர்ஜூன் புஷ்பாவாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும், அல்லு அர்ஜூனின் தோற்றமும் ரசிகர்களை வசீகரித்து கமர்ஷியல் படத்திற்கான எல்லா விஷயங்களும் இதில் இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.

‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.