கவி லயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராம் கந்தசாமி இயக்கத்தில் கமல்குமார், வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், பேபி பிரணிதி சிவசங்கரன், லாவண்யா கண்மணி, ராம்குமார், மீனா, வரதராஜன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’புஜ்ஜி அட் அனுப்பட்டி’
கோவை மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் அண்ணன் கார்த்திக் விஜய் தங்கை பிரணிதி சிவ சங்கரன் இருவரும் தங்கள் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்கள். ஒரு நாள் அண்ணன், தங்கை இருவரும் நடந்து செல்லும் போது முள் புதர் நடுவே சிக்கி ஆபத்தில் தவித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறாள் பிரணிதி.
ஆட்டுக்குட்டியின் நிலையை எண்ணி எப்படியாவது அதைக் காப்பாற்ற வேண்டும் என்று தவிக்கிறாள். தங்கைக்காக அதை மீட்கிறான் அண்ணன் கார்த்திக் விஜய்,.பிறகு இருவரும் வீட்டுக்குக் கொண்டு வந்து அதை வளர்க்கிறார்கள்.
இந்நிலையில் ,சிறுமியின் தந்தை மது குடிப்பதற்காக ஆட்டை ஒருவருக்கு விற்பனை செய்துவிட, சிறுமியும், அவரது அண்ணனும் அந்த ஆட்டை தேடி செல்கிறார்கள். இறுதியில் அண்னன் – தங்கை இருவரும் சேர்ந்து புஜ்ஜி ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டார்களா? இல்லையா? என்பதே ’புஜ்ஜி அட் அனுப்பட்டி’ படத்தின் மீதிக்கதை.
கதையின் முதன்மை கதாபாத்த்திரத்தில் நடித்திருக்கும் கார்த்திக் விஜய், பேபி பிரணிதி சிவசங்கரன் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்,, பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. அருண்மொழிச் சோழன் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறார்.
எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் எனபதை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ராம் கந்தசாமி, ஒரு ஆட்டுக்குட்டியை மட்டும் வைத்து ஒரு அழகான கதையை அனைவரும் ரசிக்கும் விதத்தில் படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’புஜ்ஜி அட் அனுப்பட்டி’ குழந்தைகள் பாசம்
மதிப்பீடு : 2.5 / 5
நடிகர்கள் : கமல்குமார், வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், பேபி பிரணிதி சிவசங்கரன், லாவண்யா கண்மணி, ராம்குமார், மீனா, வரதராஜன்
இசை : கார்த்திக் ராஜா
இயக்கம் : ராம் கந்தசாமி
மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்
Leave a Reply