ஆர் கே செல்லுலாய்ட்ஸ் சார்பில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில்  அறிமுக இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே கார்த்திகேயன் இயக்கத்தில் சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்‌ஷத்ரா, அனுபமா குமார்  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஹிட் லிஸ்ட்’  –  

ஐடி  நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாயகன்  விஜய் கனிஷ்கா அம்மா சித்தாரா, தங்கை  அபி நக்‌ஷத்ரா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்  சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது  என்று வாழ்ந்து வருகிறார் நாயகன் விஜய் கனிஷ்கா

இந்நிலையில், நாயகன் விஜய் கனிஷ்காவிற்கு மர்மமான முறையில் போன் அழைப்பு ஒன்று வருகிறது. அதில் பேசும் நபர், விஜய் கனிஷ்காவின் அம்மா மற்றும் தங்கையை  கடத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்.  இதனையடுத்து இது குறித்து போலீஸ் உயர் அதிகாரியான சரத்குமாரிடம் கூறுகிறார். நாயகன் விஜய் கனிஷ்கா இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்.

அம்மா மற்றும் தங்கையை உயிரோடு  விட வேண்டுமென்றால், வட சென்னையில் மிகப்பெரும் ரெளடியாக வலம் வரும் ராமச்சந்திரராஜுவை  கொலை செய்ய வேண்டும் என்று அந்த மர்ம நபர் கூறுகிறார். இறுதியில் அந்த மர்ம நபர் கூறியதை நாயகன்  விஜய் கனிஷ்கா செய்தாரா? இல்லையா?  அந்த  மர்ம நபர் யார்? எதற்காக இதை செய்கிறார் என்பதே ‘ஹிட் லிஸ்ட்’   படத்தின் மீதிக்கதை.

அறிமுக நாயகன் விஜய் கனிஷ்காவிற்கு  இது முதல்படம் போல தெரியாத அளவிற்கு இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக  கொலை  கூட செய்ய  துணிவது  அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு ஒரு அனுபவ நடிகர் போல நடித்து அசத்த்தியிருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரத்குமார் தனது அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். விஜய் கனிஷ்காவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு  காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். படத்தின்  முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட் கதை நகர்விற்கு துணை நிற்கிறார்.

மருத்துவமனை டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சித்தாரா, தங்கையாக நடித்திருக்கும் அபி நக்‌ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், ராமச்சந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 இசையமைப்பாளர் சி.சத்யா  மற்றும்  ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண் ஆகியோரது அர்ப்பணிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

முகமூடி மனிதர் யார்?,  என்பதை மையமாக வைத்து முழு படத்தை  உருவாக்கியிருக்கிறார்கள் இயக்குக்குனர்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன் யாரும் யூகிக்க முடியாத விதத்தில் ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்த்தை கொடுத்த  இயக்குனர்களுக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ‘ஹிட் லிஸ்ட்’   சஸ்பென்ஸ் திரில்லர்

மதிப்பீடு  : 3 / 5

நடிகர்கள் : ஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட்,

இசை : சி.சத்யா

இயக்கம் :  சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன்

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே.அகமது & பராஸ் 

Leave a Reply

Your email address will not be published.