கே குமார் தயாரிப்பில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, ஷிவதா, பிரகிடா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர் வி உதயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கருடன்’
சசிக்குமாரும் உன்னி முகுந்தனும் நண்பர்கள் ஆதரவற்ற சூரிக்கு உன்னி முகுந்தன் அடைக்கலம் கொடுக்கிறார். அவருக்கு சூரியும் விசுவாசமாக இருக்கிறார். இவர்கள் மூவரையும் சிறு வயதிலிருந்தே வளர்த்து வருபவர் வடிவுக்கரசி.
சசிகுமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. உன்னி முகுந்தனுக்கு திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாமலும் இருக்கிறார். கோம்பை கோவிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை கையகப்படுத்த, அமைச்சராக வரும் ஆர் வி உதயகுமார் அவரது உறவினரான மைம் கோபி முயற்சி செய்கிறார்கள்.
இந்த பிரச்சனையால் சசிகுமாருக்கும் உன்னி முகுந்தனுக்கும் இடையே பகை ஏற்படுகிறது. இறுதியில் சூரி விஸ்வாசத்திற்காக உன்னி முகுந்தன் பக்கம் நின்றாரா? அல்லது நியாயத்திற்காக சசிக்குமார், பக்கம் நின்றாரா ? என்பதே ’கருடன்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் நட்புக்கு ஒரு ஆபத்து என்றால் தன் உயிரை கொடுத்து காப்பாற்றும் கதாபாத்திரத்தில் அதிரடி காட்டியிருக்கிறார். அன்பு , நட்பு, குடும்பம் சண்டை என அனைத்தையும் எதார்த்த நடிப்பின் மூலம் தூக்கி நிறுத்துகிறார். சசிகுமார் முதல்பாதி படத்தை தாங்கி நிற்கிறார்.
சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரி வெகுளியான கதாபாத்த்திரத்தில் நடித்திருக்கிறார். ஒன்னு முகாந்தனுக்கு விசுவாசியாகவும் சசிகுமார் குடும்பத்திற்கு ஒரு ஆபத்து என்றதும் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சூரி இரண்டாம் பாதியில் மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார்.
பணத்திற்காக நட்பிற்கே துரோகம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் உன்னி முகுந்தன்
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்கிறது. அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் நடிப்பு ரசிக்க முடிகிறது. ரேவதி சர்மா, ஷிவதா, பிரிகிடா சகா, ரோஷினி ஹரிபிரியன், மைம் கோபி, வடிவுக்கரசி, துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. வில்சனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக உள்ளது .
விஸ்வாசம் மற்றும் துரோகம் ஆகியவைகளை மையமாக வைத்து அனைவரும் ரசிக்கும் விதத்தில் ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் மண், பெண், பொன் இவை மூன்றும் தான் மனிதர்களிடையே போட்டியை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’கருடன்’ துரோகம்
மதிப்பீடு : 3.5 /5
நடிகர்கள் : சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, ஷிவதா, பிரகிடா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி
இசை : யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் : துரை செந்தில் குமார்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply