மில்லியன் ஸ்டுடியோ சார்பில் எம் எஸ் மன்சூர் , அப்துல் காதர் தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் மேனன் , யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன் ,வேலுபிரபாகரன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வெப்பன்’
யூடியூப் சேனல் நடத்தி வரும் வசந்த் ரவி சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார். சூப்பர் சக்தியுடன் கூடிய சூப்பர் ஹியூமன் நபர்களை தேடி செல்கிறார். தேனி அருகில் லாரி விபத்தில் சிக்கிய சிறுவன் ஒருவனை சூப்பர் ஹியூமன் காப்பாற்றுகிறார் இந்த வீடியோவை தனது யூடியூப் பதிவிடுகிறார். வசந்த் ரவி
மறுபுறம் பிளாக் சொசைட்டி அமைப்பு நடத்தி வருகிறார் ராஜீவ் மேனன். மனிதர்கள் மீது அபாயகரமான ஆராய்ச்சி செய்து வருகிறார். இதனையடுத்து ராஜீவ் மேனன் குழுவை சேர்ந்தவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
இதற்கு காரணம் சூப்பர் ஹியூமன் என்பதை அறிந்து கொள்ளும் ராஜீவ் மேனன், சூப்பர் ஹியூமனை பிடிக்க தேடி செல்கிறார் இதே போல வசந்த் ரவியும் தேடி செல்கிறார்/ இறுதியில் வசந்த் ரவி – ராஜீவ் மேனன் இருவரும் சூப்பர் ஹியூமனை கண்டுபிடித்த்தார்களா? இல்லையா? வசந்த் ரவிக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதே ‘வெப்பன் படத்தின் மீதிக்கதை.
நாயகனான நடித்திருக்கும் யூடியூப் சேனல் நடத்துபவராகவும் மத்திய புலனாய்வு துறை உயர் அதிகாரியாகவும் இரண்டு வேடங்களில் நடித்த்டிருக்கிறார். இரண்டிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த்தியிருக்கிறார். முதல் பாதியில் அமைதியாக வருபவர் இரண்டாம் பாதியில் மிரட்டுகிறார்.
முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்த்திருக்கும் சத்யராஜ் அனுபவ நடிப்பின் மூலம் அந்த கதாபஹதிர்ஹத்திற்கு உயிர் கொடுத்த்திருக்கிறார் . விலங்குகள் மீது அன்பு காட்டுபவராகவும் அவைகளுக்கு ஆபத்து என்றால் ஆக்ரோஷமானவராகவும் மறுக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தான்யா ஹோப் கதாநாயகனுடன் படம் முழுவதும் வருகிறார். கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் ராஜீவ் மேனன் வில்லாத்தளத்தில் மிரட்டுகிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதைக்கு ஏற்ப கொடுத்திருக்கிறார். பிரபு ராகவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது.
சூப்பர் ஹியூன் என்ற வித்தியாசமான கதையை உருவாக்கியிருக்கும் இயக்குனர் குகன் சென்னியப்பன் அதை ஹாலிவுட் தரத்தில் கொடுத்திருக்கிறார். ஆனால் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும்
மொத்தத்தில் ‘வெப்பன் அதிசய மனிதன்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் மேனன்
இசை : ஜிப்ரான்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர்
Leave a Reply