பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரிப்பில்  நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில்  விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ’மஹாராஜா’  

சலூன் கடை நடத்தி  வரும் விஜய் சேதுபதியின் மனைவி திவ்யபாரதி எதிர்பாராத விபத்தில் இறந்து போக, தனது மகளுடன் சென்னையின் புறநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகள் விளையாட்டு முகாமிற்காக  வெளியூர் சென்றிருக்கும் நிலையில்,இவர்கள்  வீட்டில் இருக்கும் லட்சுமி காணாமல் போகிறது.

மறுநாள் காவல் நிலையம் செல்லும்  விஜய் சேதுபதி  முகமூடி அணிந்த மூன்று பேர் தன்னை தாக்கிவிட்டு லட்சுமியை திருடிச் சென்றுவிட்டதாக  புகார் அளிக்கிறார். காவலர்களின் விசாரணையில் லஷ்மி என்பது குப்பைத் தொட்டி என தெரிய வருகிறது.

விஜய் சேதுபதி, தனது லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.7 லட்சம் கொடுப்பதாக கூறுகிறார். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி, லட்சுமியை தேடும் முயற்சியில் தீவிரமாக இருங்குகிறார். இறுதியில் லட்சுமி யார்? விஜய்சேதுபதி லட்சுமியை  தீவிரமாக தேடுவதன் பின்னணி என்ன?   என்பதே  ’மஹாராஜா’   படத்தின் மீதிக்கதை..

மஹாராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, மகள் மீது அதிகமான  பாசம் வைத்திருக்கும் தந்தையாக வாழ்ந்திருக்கிறார். பாசம்,சிரிப்பு, அழுகை, கோபம் என அனைத்தையும்  இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதி, தனது 50 வது  படமாக சிறந்த படத்தை தேர்ந்தெடுத்து  அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

செல்வம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அனுராக் காஷ்யப் அந்த கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமான தேர்வாக இருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நட்டி,  கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.காமெடி வேடங்களில் இதுவரை பார்த்து ரசித்த சிங்கம்புலி வித்யாசமான கதாபாத்திரத்தில்  நடித்த்டிருக்கிறார்.

பாரதிராஜா, அருள்தாஸ், முனீஷ்காந்த், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சச்சினா மெமிதாஸ், பாய்ஸ் மணிகண்டன், வினோத் சாகர்  என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல்  செய்திருக்கிறார்கள்

இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல் கேட்பதற்கு இனிமையாக  இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.   தினேஷ் புருஷோத்தமன் கதை ஒட்டத்திற்கு பெரிதும் துணை நிற்கிறது.

தந்தை – மகள் பாசம் குறித்து படங்கள் எவ்வளவோ வெளியாகியிருக்கிறது அதில் இருந்து முற்றிலும்  மாறுபட்ட கதையை உருவாக்கி இருக்கிறார்   நித்திலன் சுவாமிநாதன்  இந்தப் படம் ஒரு பழிவாங்கும் கதை தான் என்றாலும், வெட்டுக்குத்து ரத்தம் என்று இருந்தாலும் படம் இறுதியாகச் சொல்வது அன்பு காட்டுங்கள் என்பதைத்தான்

மொத்தத்தில் ’மஹாராஜா’   மக்கள் ஆதரவு

மதிப்பீடு : 3.5 / 5

நடிகர்கள் :  விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி

இசை : பி.அஜனீஷ் லோக்நாத்

இயக்கம் : நித்திலன் சுவாமிநாதன்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர்

Leave a Reply

Your email address will not be published.