எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஆகியோர் தயாரிப்பில் சாஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’லாந்தர்
கோவையில் நேர்மையான போலீஸ் உயர் அதிகாரியான விதார்த், நாயகி ஸ்வேதாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். நாயகி ஸ்வேதாவிற்கு இருட்டு மற்றும் அதிக சத்தம் கேட்டால் சட்டென்று பயந்து மயக்கமடைந்து விடுவார் அவருடைய பயத்தை போக்க வேண்டும் என்பதற்காக கோவை புறநகர் பகுதியில் வீடு ஒன்றை எடுத்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு நாள் இரவில் கையில் இரும்பு ஆயுதத்துடன் கருப்பு ரெயின் கோட் போட்ட சைக்கோ நபர் ஒருவர் ரோட்டில் கண்ணில் வருபவர்கள் அனைவரையும் கடுமையாக தாக்குகின்றார். அந்த நபரை தேடி செல்லும் காவலர்கள் சிலரும் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைகிறார்கள்.
இந்த விஷயம் அறிவும் விதார்த், அந்த மர்ம நபரை பிடிக்க தானே நேரடியாக களத்தில் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் விதார்த் மனைவியை அந்த மர்ம நபர் கடத்தி செல்கிறார். இறுதியில் நாயகன் விதார்த் தனது மனைவியை அந்த மர்ம நபரிடம் இருந்து உயிருடன் காப்பாற்றினாரா? இல்லையா? அந்த மர்ம நபர் யார்? என்பதே ’லாந்தர்’ படத்தின் மீதிக்கதை.
முதல் முறையாக போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் விதார்த்,, மனைவியிடம் அன்பு காட்டுதல் தனது வீட்டு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலரிடம் உடல் நலம் விசாரிப்பது,கள்ளச் சாராயம் விற்பவர்களை சிறையில் அடைப்பது என ஆரம்பம் முதல் இறுதி வரையிலும், இக்கதைக்கான நாயகனாக வாழ்ந்திருக்கிறார் விதார்த்
நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி இருட்டு மற்றும் அதிக சத்தம் கேட்டால் பயப்படும் கதாபாத்த்திரத்தில் நடித்திருக்கிறார் இளம் தம்பதியாக நடித்திருக்கும் விபின் இவரது மனைவியாக நடித்திருக்கும் சஹானா, முதல் படத்திலேயே விதித்தியாசமான கதாபாத்த்திரத்தில் நடித்திருக்கிறார். சஹானாவின் தந்தையாக வரும் பசுபதிராஜ், மருத்துவராக வரும் கஜராஜ் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.பிரவீனின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை கதை ஒட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது. ஞான செளந்தர் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் கூட அழகாக இருக்கிறது.
ஒரே இரவில் நடக்கும் சம்பங்களை மைய கருவாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் சாஜி சலீம் படத்தின் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக செல்லும் கதை படத்தின் அடுத்தடுத்த காட்சிகளில் அந்த சைக்கோ நபர் யார் ? என்பதை சுலபமாக யூகிக்க முடிவதால் கதையில் தொய்வு ஏற்படுகிறது
மொத்தத்தில் ’லாந்தர்’ இருட்டில் வெளிச்சத்தை தேடுதல்
மதிப்பீடு : 2.5 / 5
நடிகர்கள் : விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ்
இசை : எம் எஸ் பிரவீன்
இயக்கம் : சாஜி சலீம்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply