Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது “அறம் செய்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது
இந்நிகழ்வினில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது….
இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார், நான் Youtube ல், பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும் சார், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார். மகிழ்ச்சி என்றேன். இவரிடம் உள்ள நல்ல விசயம் வசனத்தை முதல் நாளே போனில் அனுப்பிவிடுவார், அவர் எழுதின டயலாக்கை அப்படியே சொன்னேன். அப்போதே தெரியும், இந்தப்படம் கண்டிப்பாகச் சர்ச்சையில் சிக்குமெனத் தெரியும். முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்திருக்கிறார் ஆனால் போஸ்ட்ரில் இப்படத்தில் அரசியல் இல்லை எனப் பொய் சொல்லியிருக்கிறார். இன்று எனக்கு தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் அதிகம் இருக்கிறார்கள். நான் எப்போதும் தவறான தகவலைப் பேசுவதில்லை, என் சமீபத்துப் பதிவுகளைப் பார்த்தால் தெரியும், கள்ளச்சாரயத்தை காச்சுவபவனை தூக்கில் போட வேண்டும் என்று பேசியுள்ளேன்.
எல்லா மது ஆலைகளையும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தான் அவர்கள் எப்படி கள்ளை கொண்டு வருவார்கள். நான் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எல்லோரையும் விமர்சனம் செய்கிறேன். ஆனால் என் சில வீடியோக்களை மட்டும் பார்த்துவிட்டு தவறாக பேசுகிறார்கள். இந்தப்படத்தில் பேசிய தொகையைச் சரியாகத் தந்தார்கள், ஆனால் பாவம் ஜீவாவை ஹிரோ என சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என நினைக்கிறேன். ஜீவாவை எனக்கு 35 வருடமாகத் தெரியும், நல்ல நடிகர். நான் அரசியல்வாதி கேரக்டர் செய்துள்ளேன், இயக்குநர் ஒரு சிறு அசைவு கூட சரியாக வர வேண்டும் என அடம்பிடித்து எடுப்பார். டயலாக்கை எல்லாம் மாற்றவிடமாட்டார். மிக நன்றாகப் படத்தை எடுத்துள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
Leave a Reply