துபாயில் வானில் இந்தியன் 2 படத்தின் புரொமோஷனை புதுமையான முறையில் விளம்பரப்படுத்தி பிரம்மாண்டத்தை காட்டியிருகிறது லைகா நிறுவனம்
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ்,மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இந்தியன் 2. வரும் ஜூலை 12 உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் துபாயில் விண்ணில் பாராசூட்டில் இரண்டு சாகச வீரர்கள் இந்தியன் 2 பேனரை பறக்கவிட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Leave a Reply