அஜித் விநாயகா பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் சந்துரு இயக்கத்தில் கணேஷ் குமார், அஜு வர்கீஸ், கோகுல் சுரேஷ், அனார்கலி மரிகார் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ககனாச்சாரி’
2040 காலகட்டத்தில் காலகட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் இயற்கை அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய கட்டிடத்தில் ராகவன் என்ற ஒரு ரோபோவை தனக்கு உதவிக்காக வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.இவர்களுடன் உதவியாளர்களாக கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்க்கீஸ் இருக்கிறார்கள்.
ராணுவ வீரர் கணேஷ் குமார் பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக தொலைக்காட்சி நிறுவனம் சந்திக்கிறது. அப்போது தனது வாழ்க்கைப் பற்றியும், தான் எதிர்கொண்ட ஏலியன் சம்பவங்கள் பற்றியும் கணேஷ் குமாரும், அவரது உதவியாளர்களும் விவரிக்கிறார்கள்.
இந்நிலையில் திடீர் என ஒருநாள் அந்த இடத்திற்கு அனார்கலி மரிகார் வருகிறார் அவர் வேறு யாருமில்லை வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒரு ஏலியன் இவரை பார்த்ததும் கோகுல் சுரேஷ்க்கு காதல் மலர்கிறது . இறுதியில் கோகுல் சுரேஷ் காதல் கைக்கு கூடியதா? இல்லையா? ஏலியன் அனார்கலி தனது கிரகஹத்திற்கு சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மலையாள நடிகர் சுரேஷ கோபியின் மகன் கோகுல் சுரேஷ், மற்றும் அஜு வர்கீஸ், கணேஷ் குமார் ஆகியோர் படத்தின் முக்கியமான கதாபாத்த்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் மூவரும் பேசியே காமெடி செய்கிறார்கள். இவர்களுடன் ஏலியனாக நடித்திருக்கும் அனார்கலி மரிகார் கண்களானே பேசி கவர்கிறார்.
சங்கர் சர்மாவின் இசையில் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சுர்ஜித் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
அறிவியல் கற்பனை கதையை நகைச்சுவை கலந்து புதுமையான முறையில் சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாக்கியிருக்கிறார் அருண் சந்துரு இப்படம் மலையாளத்தில் கடந்த ஜூன் 21ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் நிறுவனம் இந்தியா முழுவதும் ஜூலை 5 ஆம் தேதி வெளியிடுகிறது.
மொத்தத்தில் ‘ககனாச்சாரி’ – புதிய கதைக்களம்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : கணேஷ் குமார், அஜு வர்கீஸ், கோகுல் சுரேஷ், அனார்கலி மரிகார்
இசை : சங்கர் சர்மா
இயக்கம் : அருண் சந்துரு
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா
Leave a Reply