கிருஷ்ணாமணி கண்ணன் (சிங்கப்பூர்) – கிஷன் தயாரிப்பில் கிஷன் ராஜ் இயக்கத்தில் கார்த்திக் ஸ்ரீராம், ரஸ்மிதா ஹிவாரி, சதீஷ், மனோ ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’எமகாதகன்’
200 வ்ருடங்குக்கு முன்பு வாழ்ந்த பாஞ்சாயி என்ற பெண்ணை கிராம மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள். அந்த பாஞ்சாயி பெண் விடுத்த சாபத்தால் அந்த கிராமத்தில் உள்ள குடும்பத்தின் மூத்த ஆண் மகன் திருமணம் செய்துக் கொண்டால் இறந்து விடுகிறார்கள். அதே சமயம், சிலர் சாபத்தை நம்பாமல் திருமணம் செய்துக்கொண்டாலும் அவர்கள் சில நாட்களிலேயே மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.
இதே கிராமத்தில் பாஞ்சாயி வாழ்க்கை குறித்து தெரு கூத்து மற்றும் கோவில் பூசாரியாகவும் இருக்கிறார் சதீஷ் ஊர் மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடி போய் உதவி செய்கிறார். இந்நிலையில் இதே ஊரை சேர்ந்த நாயகன் கார்த்திக் ஸ்ரீராம், தன் காதலியான நாயகி ராஸ்மிதா ஹிவாரியை ஊர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துக்கொள்கிறார்.
சாபத்தை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். திடீரென ஒருநாள் மர்மமான முறையில் நாயகன் கார்த்திக் ஸ்ரீராம் ஊர் எல்லையில் இறந்து கிடக்கிறார். நாயகனின் மரணத்திற்கு பாஞ்சாயி சாபம் தான் காரணம், என்று ஊர் மக்கள் சொல்கிறார்கள் ,
நாயகி ராஸ்மிதா தனது கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதை அறிந்துக்கொள்ளும் நாயகி ராஸ்மிதா உண்மையை கண்டறிய முயற்சியில் இறங்குகிறார். இறுதியில் நாயகி ராஸ்மிதா தனது கணவரின் மரணத்திற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடித்தாரா ? இல்லையா? என்பதே ’எமகாதகன்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக் ஸ்ரீராம் படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார், நாயகியாக நடித்திருக்கும் ராஸ்மிதா ஹிவாரி அழகாக இருப்பதுடன் அளவாகவும் நடித்திருக்கிறார்.பூசாரியாக நடித்திருக்கும் சதீஷ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
விக்னேஷ் ராஜா இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் எல்.டி கிராமத்து அழகை அழகாக காட்டியிருக்கிறார்,
கிராமத்து பின்னணியில் ஒரு அழகான காதல் கதை பெண் தெய்வத்தோடு ஒப்பிட்டு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கிஷன் ராஜ் தெய்வங்கள் மக்கள் காப்பாற்றத்தான் இருக்கிறார்கள் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’எமகாதகன்’ காக்கும் தெய்வம்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : கார்த்திக் ஸ்ரீராம், ரஸ்மிதா ஹிவாரி, சதீஷ், மனோ
இசை : விக்னேஷ் ராஜா
இயக்கம் : கிஷன் ராஜ்
மக்கள் தொடர்பு : வெங்கட்
Leave a Reply