இந்தியாவில் வேறு எங்கும் இது போன்ற அதிநவீன வசதிகளுடன் கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான ஆய்வுக் கூடம் இல்லை, ஏன் இந்திய அரசு சார்பில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் கூட இதுபோன்ற அதிநவீன கருவிகள் இல்லை என்று கூறிய இந்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் (MOES) செயலாளர் முனைவர். மு.ரவிச்சந்திரன் சத்தியபாமா பல்கலைக்கழக நிர்வாகத்தை பாராட்டினார்.
சென்னை OMR சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிதாக கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான ஆய்வுக்கூடம் அமைத்துள்ளனர்.
இந்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் (MOES) செயலாளர் முனைவர். மு.ரவிச்சந்திரன் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான ஆய்வுக் கூடத்தை தேசிய குறிச்சொல்லுடன் அறிவித்தார்.
மேலும் ஆராய்ச்சிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பல்கலைக்கழக வேந்தர் முனைவர் மரியசீனா ஜான்சன் வேந்தருடன் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டார்.
பல்வேறு தொழிற் துறைகளுடன் ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் பல்கலைக்கழகத் தலைவர் முனைவர். மேரி ஜான்சன், துணைத் தலைவர் ஜெ.அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரியா கேத்தரின் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் (MOES) செயலாளர் முனைவர். மு.ரவிச்சந்திரன் :-
இந்தியப் புவி அறிவியல் அமைச்சகம் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சி ஆய்வு கூடத்தை துவக்கி அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டோம்.
கடலில் உணவு, மருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், மின்சாரம் உள்ளிட்ட எண்ணற்ற மனிதர்களுக்கு தேவையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இங்குள்ள அதிநவீன கருவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஆய்வுக்கூடத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு நல்ல கண்டுபிடிப்புகளை கொண்டு வர வேண்டும் என்றார்.
இந்தியாவில் வேறு எங்கும் இது போன்ற அதிநவீன வசதிகளுடன் கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான ஆய்வுக் கூடம் இல்லை, ஏன் இந்திய அரசு சார்பில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் கூட இதுபோன்ற அதிநவீன கருவிகள் இல்லை என்று கூறினார்.
கடலில் கிடைக்கும் மூலப் பொருட்களில் இருந்து மருந்து மற்றும் மருந்து தயாரிக்கும் மூலப்பொருள், மீன்களில் கிடைக்கும் ஒமைகா 3 அதிகரிக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
கடலில் எண்ணற்ற தேவைப்படும் பொருட்கள் உள்ளது. ஆனால் அதை நாம் இதுவரை பயன்படுத்தாமல் இருக்கிறோம்.
நாம நிலவில் கூட ஆய்வு மேற்கொண்டு விட்டோம். ஆனால் ஆழ்கடலில் என்ன உள்ளது என்று ஆய்வு செய்யவில்லை என கூறினார்.
மேலும் ஆழ்கடலில் என்ன உள்ளது என்று முதலில் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் அதன் பயன்பாடு என்னவென்று ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் அதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படக் கூடாது என்றார்.
Leave a Reply