சென்னை, ஜூலை 6, 2024: காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

தூங்கும் பொழுது  ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது கேளாமை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பது இந்த ENT பிரிவின் சிறப்பு அம்சமாகும்.  நுண் காது அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைச் செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தனிப்பட்ட உள்நோக்குமானி அறைகள், ஆடியோலஜி ஆய்வகம், தலைச்சுற்றல் ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

முனைவர் மோகன் காமேஸ்வரன் காவேரி மருத்துவமனை ரேடியல் ரோடின் காது மூக்கு தொண்டை பிரிவுக்கு வருகை தந்துருந்தப்பொழுது, ENT நோயாளிகளுக்கு மருத்துவமனை வழங்கிய மருத்துவ சேவை முனைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பை உயர்வாக பாராட்டி பேசினார். திறமையான மற்றும் உயர்தர மருத்துவ வல்லுநர்களை வைத்திருப்பதன் மூலம், காவேரி மருத்துவமனை மற்ற மருத்துவமனைகளை விட தனித்துவம் பெற்றுள்ளது, என்று குறிப்பிட்டார். மேலும், மருத்துவர்கள் மற்றும் கைவச உலகத்தர உள்கட்டமைப்பின் கூட்டுறவால் காவேரி மருத்துவமனை புது உயரங்களை அடையும் என்று தீர்க்கமாகத் தெரிவித்தார்.

டாக்டர் ஆனந்த் ராஜு, காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, ENT பிரிவின் தலைவர்: “எங்கள் ENT துறையின் தொடக்கம், அனைத்து வயதினருக்கும் ஏற்படும்    காது, மூக்கு மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு விரிவான மருத்துவ சேவைகளை அளிப்பதன் மூலம் சரியான நேரத்தில் சிகிச்சை பெற அவர்களுக்கு உதவும். இங்கு வழங்கப்படும் மேம்பட்ட வசதிகள், துல்லியமான நோயறிதலும், ஒவ்வொருவரின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு சரியான சிகிச்சையை வழங்குவதையும் உறுதி செய்யும். எங்களின் அதிநவீன வெர்டிகோ ஆய்வகம் தலைச்சுற்றல் மற்றும் தீராத தலை சுற்றல் போன்ற நாள்பட்ட நிலமைகள் கொண்ட நோயாளிகளுக்கு நிபுணத்துவ சிகிச்சை அளிக்கும். கோக்லியர் உள்வைப்புகள், வால்யூமெட்ரிக் திசு குறைப்பு, பலாடோபரிங்ஜியோபிளாஸ்டி, மாக்ஸில்லோமாண்டிபுலர் முன்னேற்றம் போன்ற தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கான அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள், நுண் காது அறுவை சிகிச்சைகள் மற்றும் பல ENT சிகிச்சை செயல்முறைகளில் எங்களுக்கு பல வருட ஒருங்கிணைந்த அனுபவம் உள்ளது.”

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோடு, தனது மேம்பட்ட காது மூக்கு தொண்டைப்பிரிவை துவக்குகிறது

Leave a Reply

Your email address will not be published.