லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ஜெகன், நெடுமுடி வேணு ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இந்தியன் 2’
சென்னையில் சித்தார்த் அவருடைய நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி ஆகியோருடன் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.. நகரத்தில் நடக்கும் ஊழல் மற்றும் குற்றங்களை தங்களது யூடியூப் சேனல் வெளியிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்
இந்நிலையில் அரசு வேலைக்கு லஞ்சம் கேட்டதால் ஒரு பெண் தற்கொலை செய்து இறந்து விடுகிறார் இதை நேரில் பார்க்கும் சித்தார்த் நியாயம் கேட்டு போராடுகிறார் . இதனால் சிறைக்கு செல்ல சித்தார்தின் காதலி ரகுல் ப்ரித் சிங் அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருகிறார்
ஒரு கட்டத்தில் ஊழலை ஒழிக்க இந்தியன் தாத்தா வர வேண்டும் என நினைக்கிறார் சித்தார்த் ‘ஒரு சூழலில் இந்தியன் தாத்தா உயிருடன் இருக்கிறார் என்று தகவல் கிடைக்க சந்தோஷம் அடைகிறார் அவரை கண்டுபிடிக்க #ComeBackIndian ஹேஷ்டேக் முகம் தேட ஆரம்பிக்கிறார்.
தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தாவுக்கு இந்த தகவல் செல்ல சென்னை வருகிறார் சிபிஐ அதிகாரியான பாபி சிம்ஹா இந்தியன் தாத்தாவை கைது செய்யும் முயற்சியில் இறங்குகிறார் இறுதியில் இந்தியன் தாத்தாவை பாபி சிம்ஹா கைது செய்தாரா ? இல்லையா? என்பதே ‘இந்தியன் 2’ படத்தின் மீதிக்கதை.
சேனாபதி என்ற கதாபாத்த்திரமாக வாழ்ந்திருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா மட்டுமில்லாமல் பல கெட்டப்புகளில் வந்து அசத்தி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் மெய் சிலிருக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த படத்தையும் தனி ஆளாக தாங்கி நிறுத்தியிருக்கிறார்.
ஊழலுக்கு எதிராக போராடும் இளைஞர்களாக சித்தார்த் எதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர்,ஜெகன்,ரிஷி ஆகியோர் நடிப்பு கவனிக்க வைக்கிறது. சிபிஐ அதிகாரியாக வரும் பாபி சிம்ஹா கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. ரவி வர்மனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
இந்தியன் தாத்தா மட்டும் போதாது ஊழலுக்கு எதிராக ஒவ்வொரு இளைஞர்களும் செயல்பட வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை பிரமாண்டமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஷங்கர் ஒவ்வொரு ஊழலும் எங்கு தொடங்கி எங்கு போய் முடிகிறது என்று சொல்லி இருக்கிறார். இந்தியன் தாத்தாவின் வருகை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘இந்தியன் 2’ விஸ்வரூப வெற்றி
மதிப்பீடு : 3.5 / 5
நடிகர்கள் : கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ஜெகன், நெடுமுடி வேணு
இசை : அனிருத்
இயக்கம் : ஷங்கர்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM )
Leave a Reply