தேனி மாவட்டம் மலைப்பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் தன் பெற்றோர்களுடன்
வசித்து வருகிறான் பாண்டி.இதே ஊரில் இருக்கும் மலரை காதலித்து வருகிறான். அதே ஊரில் சட்டத்துக்கு புறம்பான தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் அவர்களை போன்று தவறான பாதையில் பயணிக்கிறான் பாண்டி. இது அறியாமல் மலர் அவனை தொடர்ந்து காதலித்து வருகிறாள். தவறின் உச்சத்துக்கு சென்ற பாண்டி, தன் காதலியின் வீட்டிற்கே சென்று தவறான செயல்களையும் செய்கிறான். இது மலருக்கு தெரிய வருகிறது.முடிவில் காதலன் பாண்டியை கண்டித்தாளா? தண்டித்தாளா ? என்பதை சுவாரசியமாக சொல்லும் கதையே திமில் .
தமிழன் சினிமாஸ் சார்பில் களபம் எம்.சகுபர் அலி தயாரிக்க எஸ்.காதர் இயக்கியிருக்கிறார்.அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்க மனிஷா ஜித் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அருண்மொழிவர்மன், சேரன் ராஜ், கனி, ராஜா, சுமி,விநாயகமூர்த்தி, சேவியர் ஆகியோரும் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு – வெங்கடேஷ் அர்ஜுன் இசை -ஏ.கே ஆல்ட்ரின் பாடல்கள் -கவின்பா, சிவக்குமார், திருப்பத்தூரான் சேவியர் எடிட்டிங் -சுரேஷ் அர்ஸ் நடனம் -தம்பி சிவா சண்டை பயிற்சி -ஆர்.சக்தி சரவணன் மக்கள் தொடர்பு – வெங்கட் தயாரிப்பு – களபம் எம்.சகுபர் அலி கதை திரைக்கதை வசனம் இயக்கம் – எஸ்.காதர் படத்தில் நான்கு பாடல்களும் இரண்டு சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
எதிர்பார்ப்புக்குள்ள இப்படம் இம்மாதம் (ஜூலை) 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளி வருகிறது.
Leave a Reply