மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி ஆகியோர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’போட்’
1943 ஆண்டு..இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடக்கிற கதை மீனவரான யோகி பாபு ஆங்கிலேயரிடம் கைதாகி இருக்கும் தன் தம்பியை காப்பாற்றுவதற்காக சென்னைக் கடற்கரைக்குப் பாட்டியுடன் செல்கிறார். அப்போது சென்னையில் ஜாப்பான் குண்டு வீசப்போவதாக தகவல் கிடைக்க மக்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடுகிறார்கள்.
யோகி பாபு தனது பாட்டியுடன் படகில் நடுக்கடலுக்கு செல்ல முயற்சிக்கிறார் அப்போது தஞ்சம் கேட்டு படகில் ஈறும் வட இந்தியர் சாம்ஸ், பிராமணர் சின்னி ஜெயந்த் – அவரது மகள் கௌரி கிஷன், கேரள இஸ்லாமியர் ஷாரா, சிறுவனான மகனுடன் கர்ப்பிணி மதுமிதா, நூலகரான எம் எஸ் பாஸ்கர், புறப்பட்டு செல்கிறார்கள். நடுக்கடலில் ஆங்கிலேயே காவல் அதிகாரி ஒருவரும் இந்த படகில் ஏறுகிறார்
இந்த சூழ்நிலையில் ஆங்கிலேய அதிகாரிக்கு . நீங்கள் பயணம் செல்லும் படகில் ஒரு தீவிரவாதி இருக்கிறான் என தகவல் வருகிறது.இதே வேளையில் சுறா ஒன்றும் அந்த படகின் அருகே வருகிறது. இறுதியில் அந்த தீவிரவாதி யார் என்பதே கண்டுபிடித்தார்களா? இல்லையா? சுராவிடம் இருந்து உயிர் பிழைத்தார்களா? இல்லையா? என்பதே ’போட்’ படத்தின் மீதிக்கதை.
மீனவராக கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு, தனது வழக்கமான நகைசுவை பாணியில் படகில் பயணிக்கிறார். கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். யோகி பாபுடன் படகில் பயணிக்கும் லீலா, கெளரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாரா, ஜெஸ்ஸி, அக்ஷத் ஆகியோர் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் கானா பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் கடலும் அது சார்ந்த பகுதிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.
நடுக்கடலில் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடும் நபர்களை உணர்வுகளை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன் மற்ற உயர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’போட்’ கடல் பயணம்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா
இசை : ஜிப்ரான்
இயக்கம் : சிம்பு தேவன்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply