வொயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவின் மசாலா பாப்கார்ன் தயாரிப்பில் இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஆனந்த், பவானி ஸ்ரீ, வி.ஜே.விஜய், இர்பான், குமரவேல், விசாலினி, லீலா, வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’
சென்னையில் ஆனந்தம் என்ற காலணியில் புதிதாக குடியேறும் நாயகன் ஆனந்த் சிறுவயதிலிருந்து அந்த காலனியில் நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள் இவர்கள் அனைவரும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக படிக்கிறார்கள்
இந்நிலையில் கல்லூரிக்கு புதிதாக வரும் நாயகி பவானி ஸ்ரீயும் இதே காலணியில் வசிக்கிறார் நாயகி பவானியை பார்த்ததும் நாயகனுக்கு காதல் வருகிறது இதனையடுத்து கல்லூரி படிப்பை முடித்ததும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை தொடங்குகிறார்கள் மேலும் BECOME A STAR என்ற மொபைல் ஆப் ஒன்றை நாயகன் கண்டுபிடிக்கிறான்
இப்படியே நாட்கள் செல்ல நண்பர்கள் சேர்ந்து தொடங்கி நிறுவனத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்காததால் நண்பர்களுக்குள் பகை ஏற்படுகிறது இதனையடுத்து நாயகியும் நாயகனை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது இறுதியில் நாயகன் நண்பர்களுடன் ஒன்று சேர்த்தாரா? இல்லையா? நாயகி பவானியை நாயகன் திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதே ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் பள்ளி. கல்லூரி. வேலைக்கு போவது என ஒவ்வொரு காலகட்டத்த்திற்கு ஏற்றவாறு நடிப்பை வழங்கியிருக்கிறார். காதலுக்காக ஏங்குவது வாழக்கையில் முன்னேற போராடுவது என கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனந்த்தின் காதலியாக வரும் பவானி ஸ்ரீ கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
ஆனந்த்தின் நண்பர்களாக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் வந்தாலும் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் தமிழ் செல்வன் தமிழ்நாடு மற்றும் சிங்காப்பூர் அழகை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
காதல், நட்பு, சுயமரியாதை, வெற்றி ஆகியவற்றை மைய கருவாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் படத்தின் முதல் பாதி நட்பு , காதல் என்று செல்ல இரண்டாம் பாதி பாசம் வெற்றி என்று செல்கிறது .படத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது அதை தவிர்த்து பார்த்தல் இது ஒரு சிறந்த படம்
மொத்தத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ நட்புக்காக
மதிப்பீடு : 2.5 / 5
நடிகர்கள் : ஆனந்த், பவானி ஸ்ரீ, வி.ஜே.விஜய், இர்பான், குமரவேல், விசாலினி, லீலா, வில்ஸ்பட், தேவ்,
இசை : ஏ.எச்.காஷீப்
இயக்கம் : ஆனந்த்
மக்கள் தொடர்பு /ல் சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
Leave a Reply