வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி  இயக்கத்தில்  காயத்ரி, பால சரவணன், ப்ரீத்தி நெடுமாறன், தேவ், ஜனா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பேச்சி’

கொல்லிமலை அரண்மைக்காடு பகுதியில் முரளி அவரது காதலியுடன் டிரக்கிங் செல்கிறார் அங்கு இருக்கும் அனுமனுஷ சக்தி இவர்களை கொன்று விடுகிறது. பல மாதங்களுக்கு பிறகு காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும் அதே வனப்பகுதிக்குள் டிரக்கிங் செல்கிறார்கள்.

வாட்ச்மேனாக இருக்கும் பழங்குடி  சமூகத்தைச் சேர்ந்த பாலசரவணன் வழிகாட்டுவதற்காக அவர்களுடன் செல்கிறார்.பாலா சரவணன் வனப்பகுதியில் செல்லும் வழியில் ஒரு இடத்தில்  “இது தடை செய்யப்பட்ட பகுதி” என்ற பலகை ஒன்று இருக்கிறது, அதை பார்த்ததும் நண்பர்கள் அந்த பகுதிக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள்.

அவர்களை தடுத்து நிறுத்தும் பாலசரவணன் பேச்சி குறித்து சொல்லி  எச்சரிக்கிறார். பாலசரவனான்  சொல்வதை கேட்காமல் ஒரு ஜோடி பேச்சி வசித்த வீட்டிற்கு செல்கிறார்கள். இறுதியில்  பேச்சியின் வீட்டிற்கு சென்றவர்கள் உயிருடன் திரும்பி வந்தார்களா? இல்லையா? என்பதே ‘பேச்சி’ படத்தின்  மீதிக்கதை.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் காயத்ரி, ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா மற்றும் மகேஷ் ஆகிய ஐந்து பேரும் உயிரை கொடுத்து  நடித்திருக்கிறார்கள். பேய் வீட்டிற்கு துணிச்சலாக  செல்வதாகட்டும் பேச்சி உருவத்தை கண்டு நடுங்குவதாகட்டும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.குறிப்பாக காயத்ரி யாரும் யூகிக்க முடியாத வேடத்தில் மிரட்டுகிறார்.

மலைவாழ் மனிதராக நடித்திருக்கும் பாலசரவணம் படத்தின் கதை நகர்விற்கு துணை நிற்கிறார். ஒரு பெண் குழந்தைக்கு பாசக்கார அப்பாவாக மனதில் நிற்கிறார் .பேச்சி  கதாபாத்திரத்தில் பாட்டி கண்களாலே மிரட்டுகிறார்.படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

 இசையமைப்பாளர் பாடல் கேட்கும் ரகம் , பின்னணி இசையில் மிரட்டுகிறார். ஒளிப்பதிவாளர் பார்த்திபன், அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதிகளை அழகாகவும்  பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்  சீனிவாவில் எவ்வளவோ பேய் படங்கள்  வந்திருக்கலாம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் ஒரு வித்யாசமான படத்தை உருவாக்கியிருக்கிறார்  அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி நீண்ட வருடங்களுக்குப் பிறகு முழுமையான திகில் அனுபவத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ‘பேச்சி’ அழிக்க  முடியாதவள்

மதிப்பீடு : 3.5 / 5

நடிகர்கள் : காயத்ரி, பால சரவணன், ப்ரீத்தி நெடுமாறன், தேவ், ஜனா

இசை : ராஜேஷ் முருகேசன்

இயக்கம் : ராமச்சந்திரன்.பி

மக்கள் தொடர்பு : சுரேஷ் சுகு  & தர்மா 

Leave a Reply

Your email address will not be published.