இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் சார்பில்  கமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, லலிதா தனஞ்சயன், பி.பிரதீப், விக்ரம் குமார் எஸ். ஆகியோர் தயாரிப்பில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், ஏ.எல்.அழகப்பன், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மழை பிடிக்காத மனிதன்’  

ரகசிய பாதுகாப்பு படையில் பணியாற்றும் விஜய் ஆண்டனி தன்னுடைய உயரதியான சரத்குமாரின்  தங்கையை காதலித்து திருமணம் செய்து  கொள்கிறார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அமைச்சர் அழகப்பன்  மகனை விஜய் ஆண்டனி  கொலை செய்கிறார்.

விஜய் அண்டனியால் பாதிக்கப்பட்ட அமைச்சர், அழகப்பன்  தன் ஆட்களை வைத்து ஒரு மழை நாளில் விஜய் அண்டனியை கொலை செய்வதற்கான பெரிய தாக்குதலை நிகழ்த்துகிறார். அந்த தாக்குதலில் விஜய் அண்டனியின் காதல் மனைவி இறந்து விடுகிறார்  

அந்த தாக்குதலில் விஜய் அண்டனி இறந்து விட்டதாக சாட்சியத்தை உருவாக்கி, அவருடைய சுய அடையாளத்தை மாற்றி  யாருக்கும் தெரியாமல் அந்தமானுக்கு அழைத்துச் செல்கிறார். புதிய இடத்திற்கு வரும் விஜய் ஆண்டனிக்கு புதிய உறவுகள் கிடைக்க, அவர்கள் மூலம் புதிய பிரச்சனைகளும் வருகிறது. இறுதியில் நாயகன் விஜய் அண்டனி புதிய சிக்கலை சமாளித்தாரா? /இல்லையா? அமைச்சர்
விஜய் அண்டனியை  கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’மழை பிடிக்காத மனிதன்’   படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் அண்டனி அமைதியாக வந்து  அதிரடியை காட்டி அனைவரும் மனதிலும் இடம் பிடிக்கிறார்.  வித்யாசமான கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷுக்கு கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் டாலி தனன்ஜெயா, போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் முரளி சர்மா ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் சத்யராஜ் அனுபவ நடிப்பு .சரண்யா பொன்வண்ணன்,தலைவாசல் விஜய், சுரேந்தர், ப்ருத்வி அம்பார், ஏ.எல்.அழகப்பன் ஆகியோர்  நடிப்பு  கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளது.

விஜய் ஆண்டனி மற்றும் ராய் ஆகியோரின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை  பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கதைக்கு கூடுதல் பலம்

கதாநாயகனுக்கு  எதற்காக மழை பிடிக்கவில்லை என்பதை வித்யாசமான திரைக்கதையின் மூலம் படத்தை
உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன் முதல் பாதி படம் சற்று மெதுவாக நகர்வது போல் இருந்தாலும், இரண்டாம் பாதியில் அந்த உணர்வை ரசிகர்கள் மறந்துவிட்டு படத்துடன் ஒன்றிவிடுகிறார்கள்.

மொத்தத்தில் ’மழை பிடிக்காத மனிதன்’  பகைவனுக்கும் பாசம் காட்டுபவன்

மதிப்பீடு : 3 / 5

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சத்யராஜ், சரத்குமார், டாலி தனஞ்செயா, முரளி சர்மா, சரண்யா பொன்வண்ணன்

இசை : விஜய் ஆண்டனி மற்றும் ராய்

இயக்கம் : எஸ்.டி.விஜய் மில்டன்

மக்கள் தொடர்பு :  சுரேஷ் சந்திரா,& அப்துல் நாசர்.

Leave a Reply

Your email address will not be published.