23′ மணி 23′ நிமிடங்களில் எடுக்கப்பட்ட “பிதா” சாதனை படத்தின் வெற்றி விழா, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைப்பெற்றது!
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ஊமை விழிகள் அரவிந்தராஜ், அனுமோகன், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச்செல்வன், நவீன் பைன் ஆர்ட்ஸ் பன்னீர்செல்வம், வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசான இளைய கட்டபொம்மன் ஆகியோர் கலந்துக் கொண்டு, “பிதா” படத்தின் தயாரிப்பாளர் ஜி.சிவராஜ், இயக்குனர் எஸ்.சுகன், நடிகர்கள் ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாரிஸ் ராஜா, மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், சிவான்ஜி, நடிகை ரிஹானா, ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ ஜெனீஷ், பிஆர்ஓ கோவிந்தராஜ் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டி, விருது வழங்கினர்!
ஸ்டார் அபிநயா குழுவினர்களின் திரைப்பட நடன நிகழ்ச்சியுடன் ‘பிதா’ படத்தின் வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது!
Leave a Reply