சென்னை: திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியின் (பேரன்) நிர்வாக தலைவர், திரு.நாகசாமி தனபாலன் (லெஜண்டரி பிரியாணி டே) அதாவது  நிறுவனர் தினம் கொண்டாட்டம் குறித்து கூறியதாவது: 67 வருட பாரம்பரிய மிக்க திண்டுக்கல் தலப்பாகட்டியில் பிரியாணி  தயார் செய்யும் உணவுகளை சுகாதாரமான முறையிலும் இப்பொழுது வரை பிரியாணி  தயார் செய்யும் முறையை ரகசியமாக பாதுகாத்து வருகிறோம். ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களுக்கு விதவிதமான உணவு ஆஃபர்கள் கொடுக்கும் வகையில் திண்டுக்கல் தலப்பாகட்டியில் கோடை ஆஃபர், 23 வகை பிரியாணி திருவிழா ஆஃபர், ரம்ஜான் இப்தார் பிரியாணி பாக்ஸ் ஆஃபர் ,அன்லிமிடெட் தோசை பரோட்டா திருவிழா ஆஃபர் என வழங்கி வருகிறோம்.

            இம் மாதம் 12-ஆகஸ்ட் அன்று உலகெங்கிலும் 104 கிளைகளில்  (தாத்தா ) நிறுவனர் திரு.நாகசாமி தனபாலன்  நினைவு தினத்தை முன்னிட்டு “லெஜெண்ட்ரி பிரியாணி தினமாக” கொண்டாடுகிறோம்.      

 அவர்களுடைய பெருமை, பாரம்பரியம் மற்றும் சுவைகள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கொண்டாடுகிறோம். இந்த ஒரு நாள் மட்டும்  திண்டுக்கல் தலப்பாகட்டி லெஜண்டரி பிரியாணி டே சிக்கன் பிரியாணி 149/-க்கு சிறப்பு சலுகை விலையில் திண்டுக்கல் தலப்பாகட்டியில் சாப்பிட்டாலும், பார்சல், சுகி , ஜொமேட்டோ மற்றும் ஆன்லைனில் ஆர்டர் மூலமாக செய்தாலும் சிறப்பு கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்  என தெரிவித்தார்.       

          திண்டுக்கல் தலப்பாகட்டியின் தலைமை தொழில் அதிகாரி திரு.செந்தில்குமார்  கூறியதாவது: 12-ஆகஸ்ட் லெஜண்டரி பிரியாணி டே அன்று, 50 ஆயிரம் கிலோ சீரக சம்பா அரிசி, 25 ஆயிரம் கிலோ சிக்கன், 4000 லிட்டர் சுத்தமான நெய் மற்றும் 20000 கிலோ ஸ்பெஷல் மசாலா கொண்டு உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட செஃப்கள் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் மற்றும் சைவ பிரியர்களுக்கு தனியே மீல்ஸ் உள்பட பல வெரைட்டி உணவுகளும் சமைக்கின்றார்கள். எங்களின் அனைத்து திண்டுக்கல் தலப்பாகட்டி கிளைகளிலும் லெஜண்டரி பிரியாணி டே முன்னிட்டு சிறப்பு விற்பனை காலை 6 மணி முதல் இரவு 12மணி வரை செயல்படும். சிக்கன் பிரியாணி 149/- சிறப்பு சலுகை விலையில் வழங்குகின்றோம்.  1.50 லட்சம் வாடிக்கையாளர்கள் லெஜண்டரி பிரியாணி டே அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திண்டுக்கல் தலப்பாகட்டி கிளைகளில் சாப்பிடுவதன் மூலம் கின்னஸ் -ல் இடம்பெறுவதே எங்களது குறிக்கோளாகும் ஆகும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.