ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் பிரவீன் கிஷோர், கௌரவ் காளை, எஸ்தர் அனில். சாரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மின்மினி’
ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் கெளரவ் காளை கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் . இவரால் அந்த பள்ளிக்கு பெருமை வந்து சேர்க்கிறது. இவருக்கு இமாசலம் வரை இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது ஆசை இதே பள்ளியில் புதிதாக வந்து சேருகிறார் பிரவீன் கிஷோர் இவர் சதுரங்க விளையாட்டில் சிறந்த வீரராக இருக்கிறார்.
இந்நிலையில் பிரவீன் கிஷோரை அடிக்கடி சீண்டி தொல்லை கொடுக்கும் கெளரவ் காளை ஒரு கட்டத்தில் நண்பராக ஏற்று கொள்ள முடிவு செய்கிறார். ஆனால், இதை புரிந்துக்கொள்ளாத பிரவீன் கிஷோர் அவரிடம் இருந்து தள்ளியே இருக்க நினைக்கிறார்.
ஒரு நாள் பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனம் விபத்திற்கு உள்ளாக பிரவீன் கிஷோர் மற்றும் சக மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் கெளரவ் காளை, பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விடுகிறார்.இதனையடுத்து குற்ற உணர்வில் இருக்கும் பிராவின் கெளரவ் காளைவின் ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார்
மறுபக்கம் கெளரவ் காளையின் உடல் உறுப்பு தானத்தால் உயிர் பிழைத்து புதிய வாழ்க்கையை தொடங்கும் எஸ்தர் அனில், கெளரவ் காளைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவ்ரது ஆசையை நிறைவேற்ற நினைக்கிறார் இறுதியில் பிரவீன் கிஷோர் – எஸ்தர் அனில். இருவரும் சேர்ந்து கெளரவ் காளைவின் ஆசையை நிறைவு செய்தார்களா? இல்லையா? என்பதே ’மின்மினி’ படத்தின் மீதிக்கதை.
சபரி கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரவீன் கிஷோர் எதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
பாரி முகிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளரவ் காளை, துறுதுறு வென வந்து அனைவரின் மனதில் இடம் பிடிக்கிறார். பிரவீனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில் துணிச்சலான கதாபாத்திரல் நடித்திருக்கிறார். படத்தில் மற்ற கதாபாத்த்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின் இசையில் பாடல்கள் மெலோடி ரகம் பின்னணி இசையும் கதைக்கு பலம் சேர்க்கிறது. மனோஜ் பரமஹம்சா மலைப்பகுதிகள் மற்றும் நெடுந்தூர பயணத்தை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பூவரசன் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் ஹலிதா ஷமீம். மின்மினி. படத்தை 8 ஆண்டுகளாக காத்திருந்து இயக்கிஇருக்கிறார் ஹலிதா ஷமீம். நடிகர், நடிகைகளின் சிறு வயது பருவத்தை முதலில் படமாக்கிவிட்டு, பின் 8 ஆண்டுகள் காத்திருந்து இளம் வயது பருவத்தில் அவர்களை நடிக்க வைத்து படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் ’மின்மினி’ நட்பை போற்றும்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : பிரவீன் கிஷோர், கௌரவ் காளை, எஸ்தர் அனில்
இசை : கதிஜா ரஹ்மான்
இயக்கம் : ஹலிதா ஷமீம்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & நாசர்
Leave a Reply