ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில்  என். சுரேஷ் நந்தா தயாரிப்பில் , இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட்  மில்டன்  ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’வீராயி மக்கள் ’

அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் வேல ராமமூர்த்திக்கு 2 தம்பிகள் மற்றும் தீபா ஒரு தங்கை இருக்கிறார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையால் பல ஆண்டுகளாமாக பேச்சு வார்த்தை இல்லாமல் இந்த குடும்பம் இருக்கிறார்கள்.

இந்நிலையில் வேல ராமமூர்த்தியின் இளைய மகன்  நாயகன் சுரேஷ் நந்தா இவருடைய அத்தை மகளை பார்த்ததும் காதல் கொள்கிறார். நாட்கள் செல்ல இருவரும் காதலிக்கிறார்கள் நாயகி திருமணம் நடக்க வேண்டும் என்றால் பிரிந்த குடும்பகள்  ஒன்று சேர வேண்டும் என்று  கூறுகிறார்.

இதனையடுத்து  பிரிந்த குடும்பத்தை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்குகிறார் நாயகன்  சுரேஷ் நந்தா ஒரு நாள் இவரது சித்தப்பா மாரிமுத்துவிற்கு நெஞ்சுவலி  வர மருத்துவ மனையில் சேர்கிறார்   இறுதியில் வேல ராமமூர்த்தி தம்பி மாரிமுத்துவை  பார்க்க மருத்துவ மனைக்கு சென்றாரா? இல்லையா?  நாயகன் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்தாரா? இல்லையா? என்பதே ’வீராயி மக்கள் ’ படத்தின் மீதிக்கதை.

தயாரிப்பாளர் மற்றும் கதை நாயகனாக நடித்திருக்கும் நாயகன் சுரேஷ் நந்தா  கிராமத்து  இளைஞராக இயல்பாக நடித்திருக்கிறார். நாயகியை உருகி உருகி காதலிப்பது குடும்பத்தை ஒன்று சேர்க்க அப்பாவையே எதிர்த்து பேசுவது என கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

மூத்த அண்ணனாக கம்பீரமான நடித்திருக்கிறார் வேல ராமமூர்த்தி,  மறைந்த நடிகர் மாரிமுத்து இவரது மனைவியாக நடித்திருக்கும்  செந்தி குமாரி சகோதரியாக வரும் தீபா இவரது மகளாக வரும் நாயகி  நந்தனா, ரமா . வீராயி கதாபாத்தில் வருபவர் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்து பாராட்டு பெறுகிறார்கள்.

இசையமைப்பாளர்  தீபன் சக்கரவர்த்தி  இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி  இசை  படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சீனிவாசன் கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறார்.

அன்னான் ,- தங்கை பாசத்தை மைய கருவாக வைத்து  கிராமிய பின்னணியில் யதார்த்த வாழ்வியலை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாகராஜ் கருப்பையா ஒற்றுமையே பலம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்/

மொத்தத்தில் ’வீராயி மக்கள்  பாசக்கார்கள்.

மதிப்பீடு : 3 / 5

நடிகர்கள் : வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட்  மில்டன்

இசை : தீபன் சக்கரவர்த்தி

இயக்கம் : நாகராஜ் கருப்பையா

மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா

Leave a Reply

Your email address will not be published.