சென்னை, ஆகஸ்ட் , 2024:* இந்தியாவில் பொறியியல் கல்வியை தனிப்பயனுள்ளதாக ஆக்கும் ஒரு முன்னோடித்துவ முயற்சியாக, 2019-ம் ஆண்டின் புதிய கல்வி கொள்கையின் ஒரு அடித்தள அம்சமாக இருந்த தேர்ந்தெடுப்பு அடிப்படையிலான கிரெடிட் சிஸ்டம்-ஐ அறிமுகம் செய்திருக்கும் இந்நாட்டின் உயர் கல்வி நிறுவனங்கள் முதலாவது என்ற பெருமையை சவீதா பொறியியல் கல்லூரி பெற்றிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிற சுயாட்சி பெற்ற கல்லூரியான இது ஃப்ளெக்ஸி லேர்ன் என்ற இத்திட்டத்திற்காக காப்புரிமையையும் பெற்றிருக்கிறது. மாணவர்களது கல்வி பயணத்தை முற்றிலும் அவர்களின் விருப்பத்தெரிவுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முற்றிலும் நெகிழ்வுத்திறன் கொண்ட ஒரு தனித்துவமான கிரெடிட் சிஸ்டமாக ஃப்ளெக்ஸி லேர்ன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
ஃப்ளெக்ஸி லேர்ன் வணிக குறியீட்டை பெற்றிருக்கும் நெகிழ்வை கொண்டாடுவதற்காக இன்று ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் புதுடெல்லியை சேர்ந்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் உறுப்பினர் செயலர் புரொஃபசர். ராஜீவ் குமார், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சர்வதேச அறிவியல் ஒத்துழைப்பு அமைப்பின் மேனாள் தலைவர் டாக்டர். S.K. வர்ஷினி, சென்னையிலுள்ள இந்திய காப்புரிமைகள் அலுவலகத்தின் வணிக குறியீடுகள் மற்றும் புவியியல் சுட்டுமைகளுக்கான உதவிப் பதிவாளர் Ms. மகாலட்சுமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நாட்டில் உயர் கல்வியை தனிப்பயனாக்குதலுக்கான சவீதா பொறியியல் கல்லூரியின் முன்னோடித்துவமான முயற்சிகளை இந்த உயரதிகாரிகள் மனமார பாராட்டினர்.
ஃப்ளெக்ஸி லேர்ன் என்ற இந்த புத்தாக்க அணுகுமுறை, முதல் செமஸ்டரிலிருந்தே தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகள், ஆசிரியர்கள், கால அட்டவணை மற்றும் தளத்தினை தேர்வு செய்ய மாணவர்களை அனுமதிக்கிறது. தங்களது முக்கிய பாடங்களை கற்று தேர்ச்சியடையும் அதே நேரத்தில் சிறிய/(மைனர்) பல்கலைக்கழக பட்டங்களை அல்லது சிறப்பு பிரிவுகளில் தேர்ச்சி பெற அனுமதிக்கிற ஒரு சுய வழிகாட்டலுள்ள கற்றல் முறையாக இது இருக்கிறது. 8 செமஸ்டர்களுக்கு பதிலாக 6 செமஸ்டர்களில் படிப்பை பூர்த்தி செய்வதற்கான சாத்தியத்தையும் வழங்குவது நெகிழ்வுத்திறனுள்ள இக்கல்வி திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். ஊதியம் பெறுகிற இன்டர்ன்ஷிப்களையும் மற்றும் அனுபவ ரீதியிலான கற்றலையும் இது ஏதுவாக்குகிறது. சேர்க்கை நுண்ணறிவால் ஏதுவாக்கப்படும் ஒரு தனிப்பயனாக்கப்பட்ட ERP மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்பின் ஆதரவைப் பெறுகிற ஃப்ளெக்ஸி லேர்ன், கல்வி தளத்தில் புத்தாக்கத்தை அறிமுகம் செய்வதில் சவீதா பொறியியல் கல்லூரியை (SEC) முன்னணியில் நிலைநிறுத்தியிருக்கிறது.
Leave a Reply