ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ரகு தாத்தா’
1960 காலகட்டத்தில் நடக்கும் கதை வள்ளுவன்பேட்டை என்ற கிராமத்தில் வசித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அதே ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர் ஹிந்தி திணிப்பை எதிர்ப்பவராக போராடி அந்த ஊரில் உள்ள ஹிந்தி பிரசார சபாவை இழுத்து மூடுகிறார் .
க.பாண்டியன் என்ற புனை பெயரில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது வாசகரான ரவீந்திர விஜய்யுடன் நட்பாக பழகி வருகிறார். எனினும் திருமணத்தின் மீது விருப்பம் இல்லாமல் தொடர்ந்து திருமணத்தை தவிர்த்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இவரது தாத்தா எம் எஸ் பாஸ்கருக்கு புற்றுநோய் வந்து விடுகிறது.
தனது கடைசி ஆசையாக பேத்தி கீர்த்தியின் திருமணத்தை நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார் தாத்தா எம் எஸ் பாஸ்கர்.வேறு வழியின்றி தன் புத்தக வாசிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார் கீர்த்தி. சுரேஷ்
ஒரு கட்டத்தில் ரவீந்தரின் உண்மையான முகம் கீர்த்தி சுரேஷுக்கு தெரிய வர திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார்.இறுதியில் .நாயகி கீர்த்தி திருமணத்தை நிறுத்தினாரா? இல்லையா? தாத்தா எம் எஸ் பாஸ்கர் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே ’ரகு தாத்தா’ படத்தின் மீதிக்கதை.
கயல் விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி கீர்த்தி சுரேஷ் தமிழ் மொழி மீது கொண்டவராகவும் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக போராடக் கூடியவவராகவும் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். திருமணத்தை நிறுத்த போராடும் திட்டங்கள் காமெடியாக இருக்கிறது.
கதாநாயகனாக நடித்து இருக்கும் ரவீந்திர விஜய் வித்யாசமான நடிப்பை வழங்கி பாராட்டு பெறுகிறார். தாத்தாவாக வரும் எம் எஸ் பாஸ்கர்., கீர்த்தி அண்ணாக்க வரும் ராஜேஷ் பாலச்சந்திரன் இவ்வரஹு மனைவியாக வரும் இஸ்மத் பானு , தேவதர்ஷினி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
ஷான் ரோல்டன் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு காலகட்டத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது.
பெண்ணியம் பேசுபவர்கள், இந்தி திணிப்புக்கு எதிராக போராடுபவர்கள் என்பதை மையமாக வைத்து திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுமன்குமார் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக பதிவு செய்ய தவிர விட்டுவிட்டார் முதல் பாதி சற்று பொறுமையாக செல்ல , இரண்டாம் பாதி ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ’’ரகு தாத்தா ஹிந்தி திணிப்பிற்கு எதிரானவன்
மதிப்பீடு : 2.5/ 5
நடிகர்கள் : : கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன்
இசை : ஷான் ரோல்டன்
இயக்கம் : சுமன் குமார்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
Leave a Reply