ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி, முத்துக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தங்கலான்’

வட ஆற்காடு வேப்பூர் கிராமத்தில் வசித்து வரும் விக்ரம் இவரது மனைவி பார்வதி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். விக்ரம் தனது நிலத்தில் பயிர் செய்து வர  அந்த நிலத்தை சூழ்ச்சியால் அபகரிக்கிறார் மீராசானா முத்துக்குமார் விக்ரமையும் அவரது குடும்பத்தையும் அடிமையாக்கி வேலை வாங்குகிறார்.

இந்நிலையில் ஆங்கிலேயரான டேனியல் விக்ரமின் கிராமத்திற்கு வந்து தான் தங்கத்தை தேடி செல்வதாகவும் அதற்கு கிராமத்தினர் உதவ முன் வர வேண்டும் என கிராமத்தினர் தெறித்து ஓடி விடுகின்றனர்.அங்கு பிசாசு இருப்பதாகவும், தங்கத்தைத் தேடி சென்றால் மரணம் தான் நிகழும் என்று கூறி கூட செல்ல அனைவரும் மறுக்கிறார்கள்.

இந்நிலையில் மிராசிடம்  அடிமையாக கிடப்பதற்கு தங்கத்தைத் தேடிச் சென்றால் கிடைக்கும் பணத்தில் தனது நிலத்தை மீட்டுவிடலாம்  என நினைக்கும் விக்ரம் ஆங்கிலேயனான டேனியலுடன் செல்கிறார். இறுதியில் விக்ரம் தங்கத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா?  மிராசிடம்  இருந்து  தனது நிலத்தை மீட்டாரா? இல்லையா ? என்பதே ’தங்கலான் படத்தின் மீதிக்கதை.

தங்கலான் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் சியான் விக்ரம் நடிப்பு, தோற்றம், உடல்மொழி என அனைத்திலும் பிரமிக்க வைத்திருக்கிறார் மகா கலைஞன் விக்ரம்  படத்தின் முழுக்கதையும் தன் தோல் மீது  சுமந்து நிற்கிறார்

விக்ரம் மனைவியாக  கங்கம்மா கதாபாத்திரத்தில் 5 குழந்தைகளுக்கு அம்மாவா நடித்த்திருக்கும் பார்வதி வீரமுடன் போட்டி போட்டு நடித்த்திருக்கிறார்.  ஆர்த்தி என்கிற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகாமோகனன்,கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.  டேனியல், பசுபதி, முத்துக்குமார்,ஹரிகிருஷ்ணன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் திரும்ப கேட்கும் ரகம் பின்னணி இசை கதையோடு பயணிக்க வைக்கிறது. கிஷோர்குமாரின்  ஒளிப்பதிவு கால கட்டத்தின் தன்மை மாறாமல் அழகாகவும் பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.

நிலத்தை மீட்க வேண்டி செல்லும் மனிதனின் முயற்சியை  மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்  அவர்களுடையை வாழ்க்கை முறை, உழைப்பு ,போராட்டம் ஆகியவற்றை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் தங்கலான்’ தங்கத்தை தேடி செல்லும் தங்கமகன்

மதிப்பீடு : 3.5 / 5

நடிகர்கள் : விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல், பசுபதி, முத்துக்குமார்

இசை : ஜி வி பிரகாஷ்குமார்

இயக்கம் : : பா ரஞ்சித்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

Leave a Reply

Your email address will not be published.