சென்னையில் அமரர் ஊர்தி ஓட்டுநரான இருக்கிறார் விமல் இவரது மனைவியான நாயகி மேரி ரிக்கெட்ஸ் நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலி வர தனியார் மருத்துவ மனையில் சேர்கிறார்.மருத்துவ செலவிற்காக 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி களக்காடு கிராமத்தை சேர்ந்த ஊர் பெரியவர் சாலை விபத்தில் இறந்துவிட அவ்ரது உடலை திருநெல்வேலிக்கு எடுத்து செல்லும் பெறுப்பு விமலுக்கு கொடுக்கப்படுகிறது. இறந்த பெரியவருக்கு இரண்டு மனைவிகள் மூத்த மனைவியின் மகன் ஆடுகளம் நரேன், இளைய மனைவி மகன் பவன் இருவரும் அப்பா உடலை பெற போட்டி போட்டுக் கொள்கிறார்கள்.
திருநெல்வேலிக்கு பெரியவர் உடலை எடுத்துச் செல்லும் வழியில் வாகனம் நின்று விட தெரு கூத்து கலைஞரான கருணாஸ் உதவி செய்ய அவரையும் உடன் அழைத்து செல்கிறார் விமல் இதனையடுத்து உயிருக்கு போராடும் ஒரு காதல் ஜோடியை காப்பாற்ற பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் அதாவது வாகனத்தில் கொண்டு சென்ற பெரியவர் உடல் காணாமல் போகிறது.
இறுதியில் காணாமல் போன பெரியவர் உடல் கிடைத்ததா/ இல்லையா? கருணாஸ் விமலுக்கு உதவி செய்தாரா? இல்லையா? என்பதே ’போகுமிடம் வெகுதூரமில்லை’ படத்தின் மீதிக்கதை.
அமரர் ஊர்தி ஓட்டுநரான நடித்திருக்கும் விமல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். காதல் ஜோடிகளை காப்பாறுவதாகட்டும் காணாமல் போன உடலை தேடி அலைவதாகட்டும் மனைவி மீது வைத்திருக்கும் பாசம் என அனைத்தையும் தனது நடிப்பின் மூலம் பாராட்டும் வகையில் செய்திருக்கிறார் விமல்
விமல் மனைவியாக நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸ், படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் தெரு கூத்து கலைஞராக நடித்திருக்கிறார் கருணாஸ் விமலுக்கு பல சிக்கல்களை கொடுத்தாலும் இறுதி காட்சியில் அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறார் கருணாஸ்
படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கதையோடு பயணிக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு படத்திர்ற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது .
தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்கல் கொண்ட படங்கள் போல இல்லாமல் வித்யாசமான முறையில் மனித நேயத்தோடு படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா தான் சொல்ல வந்ததை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்று சொல்லியியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்
மொத்தத்தில் : ’போகுமிடம் வெகுதூரமில்லை’ மரணத்தில் ஒரு மனித நேயம்
மதிப்பீடு : 3.5 / 5
நடிகர்கள் : விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி
இசை : என்.ஆர்.ரகுநந்தன்
இயக்கம் : இயக்குநர் மைக்கேல் கே.ராஜா
மக்கள் தொடர் : சதிஷ் & சிவா (AIM )
Leave a Reply