சிங்காவுட் புரொடக்ஷன், நம்பிராஜன் இண்டர்நேஷனல் சினிமாஸ் ராக் எண்டர்டெயின்மெண்ட்ஸ். சார்பில் ராஜேந்திரன் கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், பிரேம்சந்த் நம்பிராஜன், ராஜேந்திரன் நீதிபாண்டி, கஜா, சரஸ் ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கத்தில் சந்தோஷ் நம்பிராஜன், குஷி, அன்புராணி, கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், இயக்குனர் சம்பத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’உழைப்பாளர் தினம்’
குடும்ப சூழ்நிலைக்காகவும் தனது சொந்த ஊரில் கடை ஒன்றை கட்டி வருவதால் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் சிங்கப்பூரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள்.
இதனையடுத்து நாயகி குஷியை பார்க்கவும் நாயகனுக்கு பிடித்து போக திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணமான 2 வாரங்களில் மீண்டும் சிங்கப்பூர் செல்வ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பல மாதங்கள் கடந்து ஓட நிறைமாத கர்ப்பிணியான நாயகி குஷி மருத்துவனையில் அவசர பிரிவில் அனுமதிப்படுகிறார்.
இந்நிலையில் தகவல் தெரிந்தும் உடனடியாக ஊருக்கு கிளம்பும் நாயகன் சந்தோஷ் நம்பிராஜனால் ஊருக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இறுதியில் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் மனைவி – குழந்தையை பார்த்தாரா? இல்லையா? ஊரில் கட்டிய கடையை திறந்தாரா? இல்லையா? என்பதே ’உழைப்பாளர் தினம்’ படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜன் தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இயல்பான நடிப்பை கொடுத்து கவனத்தை ஈர்க்கிறார் .வெளிநாட்டில் உணவு கூட சாப்பிடாமல் ஒரு வேளை டீ மட்டும் குடித்து உழைத்து சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்தாரும், சொந்தக்காரரும் ஏமாற்றுவதை பார்த்து கண் கலக்கும் இடத்தில் நடிப்பில் தனி கவனம் பெறுகிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அன்புராணி, மற்ற வேடங்களில் நடித்திருக்கும் கார்த்திக் சிவன், சிங்கப்பூர் துரைராஜ், இயக்குநர் சம்பத்குமார் என பதத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
மசூத் ஷம்ஷாவின் இசையில், பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பின்னணி இசை கதியொரு பயணிக்கிறது.சதீஷ் துரைகண்னுவின்ஒளிப்பதிவு சிங்கப்பூர் மற்றும் கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறார் .
குடும்பங்ககளை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வார்கள் என்ன மாதிரியான வலிகளை மேற்கொள்கிறார் என்பதை மையமாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன், வெளிநாடுகளில் கடுமையாக உழைத்தாலும் இறுதியில் தங்களது வாழ்க்கையையும், கனவுகளையும் தொலைத்துவிட்டு புலம்பும் உழைப்பாளர்களின் உணர்வை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக காஃபி மேட்டர் நிச்சயம் தம்பதிகளிடம் வரவேற்பை பெறுவது உறுதி.
மொத்தத்தில் ’உழைப்பாளர் தினம் வெளிநாட்டில் துளைத்த உள்ளூர் வாழ்க்கை
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : சந்தோஷ் நம்பிராஜன், குஷி, அன்புராணி, கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ்,
இசை : மசூத் ஷம்ஷா
இயக்கம் சந்தோஷ் நம்பிராஜன்
மக்கள் தொடர்பு : ராஜ்குமார்
Leave a Reply