மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தில் யாரோ, இவன் யாரோ என்ற பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். கமல்ஹாசன் பாடல் பாடியதை ஒலிப்பதிவு போது எடுக்கப்பட்ட வீடியோ இசை நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
நடிகர் கார்த்தி பேசுகையில்,
“கோவை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்றாலும், கோடை விடுமுறையில் கோவைக்கு தான் வருவோம். எங்க அப்சி ஊர் சொர்க்கம். அங்கு எல்லாரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அப்படி இருக்கும். பொற்காலம் என்றால் லீவில் ஊருக்கு வரக்கூடிய நாள் தான். ஊரில் இருக்கும் 10 நாளும் அருமையாக இருக்கும். 8 பேருக்கு விறகு வைத்து சமைத்து அனைவருக்கும் பரிமாறுவார்கள். குடும்பத்தினர் உறவு தான் மெய்யழகன் படம். 96 படத்தில் காதலிப்பவர்களை பிரேம்குமார் கதற விட்டார், காதல் பண்ணாதவர்களை ஏங்கவிட்டார். பிரேம் குமாரின் வசனங்கள் அருமையாக உள்ளது. மெல்லிய உணர்வுகள் தரும் படம் பண்ண நான் ஏங்கிய காலம் உள்ளது. குடும்பத்தின் உறவுகளும், வேர்களும் குறித்து இந்த படம் பேசும். போன் இருந்தால் போதும் யார் கூடவும் பேச வேண்டாம் என்று ஆகிவிட்டது. ஆனால் அப்படி கிடையாது. அப்படி இருக்கக் கூடாது பிரேம் குமார் என்ற இயக்குநரை வெளியே கொண்டு வந்த நடிகர் விஜய் சேதுபதி நன்றி சொல்ல வேண்டும். காதலே காதலே என்ற ரிங்டோன் எல்லா பக்கமும் ஒலித்து கொண்டு இருக்கிறது.
நடிகர் சூர்யா பேசுகையில்,
“நேற்று இரவு இந்த படத்தை நான் பார்த்தேன். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்து உள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதில் அனவருக்கும் நன்றி சொல்லி வருகிறேன். ஜெய்பீம் இயக்குநர் மூலம் தான் படம் என்னிடம் வந்தது. தொப்புள் கொடி உறவு, எங்களுடைய வேர், எங்களின் அடையாளம் கோவை தான். நடிக்க வந்து 27 வருடம் ஆகிவிட்டது. ஆனால் இந்த படத்திற்கு கோவையில் விழா எடுப்பது ரொம்ப மகிழ்ச்சி. இரத்த சொந்தங்கள் நம்மை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும் அன்பு மிக பரிசுத்தமானது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு கார்த்தியை கட்டி பிடித்த படம் இது.
அக்டோபர் 10 ம் தேதி வேட்டையன் படம் வருகிறது. ரஜினி சாருக்கு வழிவிடுவோம். அவர் மூத்தவர், சினிமாவின் அடையாளம். 50 வருடங்களாக நடித்து வருகிறார். அவர் படம் வருவது தான் சரி. கங்குவா ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்து கொள்வீர்கள். கங்குவா படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். வெறுப்பை காண்பிக்க வேண்டாம். அன்பை மட்டும் பகிர்வோம். கங்குவா படம் வரும்போது நின்று பேசும்” எனத் தெரிவித்தார்.
Leave a Reply