ஃபேஷன் மற்றும் டிசைனிங் துறைகள் தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முன்னிலையில் உள்ளது. பல கல்லூரிகளில் இத்துறைகளுக்கான பட்டப் படிப்புகள் இருப்பதோடு, இதில் பல்வேறு வேலை வாய்ப்புகளும் உள்ளன. இத்துறை பற்றி அறியாமல் இருப்பவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் விதமாகவும், இத்துறையில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், கிரிஸ் லெகன்ஸி நிறுவனம் ‘சோல் வாக் இன் ஃபேஷன்’ (Souls walk in Fashion) என்ற தலைப்பில் ஃபேஷன் போட்டி ஒன்றை நடத்தியது.
ஃபேஷன் துறையில் பல வருடங்களாக சிறப்பாக பணியாற்றி வரும் சங்கீதா மரியா ஆலன், ஃபேஷன் மற்றும் டிசைனிங் துறையில் பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஃபேஷன் மற்றும் டிசைனிங் துறை மாணவர்களுக்கு ஊக்களிக்கும் நோக்கத்தில் ‘சோல் வாக் இன் ஃபேஷன்’ (Souls walk in Fashion) போட்டியை மிக பிரமாண்டமான முறையில் வடிவமைத்து நடத்தியுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற ‘ஸ்டைல் சகா’ 24’ (Style Saga’24) மற்றும் ‘ஸ்வே ஸ்பாட்லைட்’ 24’ (Sway Spotlight’24) ஆகிய நிகழ்ச்சிகளின் முதல் பதிப்பை சங்கீதா மரியா ஆலனின் வழிகாட்டுதலின் கீழ் கிரிஸ் லெகன்ஸி நிறுவனம் மிக சிறப்பாக நடத்தி ஃபேஷன் துறையில் முத்திரை பதித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் ‘சோல் வாக் இன் ஃபேஷன்’ (Souls walk in Fashion) போட்டியி, ‘ட்ரீம் சோன்’ (Dreamzone), ‘ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டி’ (Hindustan University) ’ஐரிஸ் ஃபேஷன் இன்ஸ்டியூட்’ (Irisz Fashion Institute), ‘ஸ்டுடியோ மாயா’ (Studio Maya) உள்ளிட்ட பல்வேறு ஃபேஷன் மற்றும் டிசைனிங் கல்லூரிகளை சேர்ந்த பல திறமையான மாணவர்கள் மற்றும் எதிர்கால ஃபேஷன் கலைஞர்களை ஒன்றிணைத்து பல புதுமையான படைப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும், எம்.ஜி.ஆர், ஷீபா பூட்டிக் மற்றும் தொழில்முறை வடிவமைப்பாளர்களான லீனாவின் பூட்டிக், லோகேஷ் மற்றும் ராஜி ஆனந்த் (நகை வடிவமைப்பாளர்) ஆகியோரது படைப்புகள் சிறப்பான படைப்பாற்றல் பார்வையாளர்களை பிரமிக்க வைத்ததோடு, மாணவர்களின் கற்பனை உணர்வை ஊக்குவிக்கும் விதத்தில் இருந்தது.
இப்போட்டியில் தங்களின் வடிவமைப்புகள் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டியின் மாணவர்கள் ஆம்பெல், ஜார்ஜ் ஷோஷ்வா மற்றும் நர்மதா ஆகியோர் முதல் இடத்தை பிடித்து வெற்றியாளர் பட்டத்தை வென்றார்கள்.
ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டியின் முத்து கிஷோர், அக்ஷயா ஸ்ரீ மற்றும் முகில் ராணி ஆகியோர் இரண்டாவது இடத்தை பிடித்தனர். ஸ்டுடியோ மாயா மாணவர்களான நஃபிஷா மற்றும் ஷேக் ருக்சானா மூன்றாவது இடத்தை பிடித்தனர்.
திரை நட்சத்திரங்கள் மற்றும் ஃபேஷன் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பையுடன், சான்றிதழ் வழங்கி கெளரவித்தனர்.
Leave a Reply