கன்னட திரையுலகில் ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திரங்களான ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ ரமேஷ் அரவிந்த் மற்றும் ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் ஆகிய இருவரும் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கௌரி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரூ கவுடா பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாசா திரையரங்கத்தில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.  உற்சாகம் நிறைந்த இந்த விழாவில் நடிகையும், தொகுப்பாளருமான ஜானகி ராயலா கிளாப் அடிக்க, இயக்குநர் விக்யாத்தின் மனைவி சுவாதி விக்யாத் கேமராவை ஆன் செய்ய, முதல் காட்சி படமானது.

ரமேஷ் அரவிந்த் மற்றும் கணேஷ் முதன்முறையாக இணையும் இந்த திரைப்படத்திற்கு ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வர்க்கம் மற்றும் உணர்ச்சிகளை வலிமையுடன் எதிரொலிக்கிறது. இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்தத் திரைப்படம் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கும் வகையிலும் டீசர் அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் ரமேஷ் அரவிந்த் பேசுகையில், ” இயக்குநர் விக்யாத் ஏ. ஆர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விக்யாத் ‘புஷ்பக விமானம் ‘ எனும் திரைப்படத்தின் கதையை விவரிக்க வந்தபோது எனக்கு அறிமுகமானார். அந்த தருணத்திலிருந்து அவரின் முன்னேற்றத்தை நான் கண்டு வருகிறேன். அவருடைய கலை உணர்வை பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பில் வெளியான படங்களின் போஸ்டர்கள் மற்றும் டீசரில் ஒரு நுட்பமான.. உணர்வுபூர்வமான குணம் இருக்கிறது.  இறுதியில் அவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதை காணும் போது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது அவருக்கு அருமையான அனுபவமாகவும் இருக்கும்.‌

நடிகர் கணேஷ் பேசுகையில், ” கௌரி பண்டிகை நாளில் இது போன்ற அர்த்தமுள்ள திரைப்படத்தை தொடங்குவது தனி சிறப்பு. இந்த நாளில் எங்களின் ‘யுவர்ஸ் சின்சியர்லி ராம்’ படத்தை அறிமுகப்படுத்துகிறோம். இந்த திரைப்படம் அழகான கதையம்சத்துடன் தயாராகிறது. இந்த திரைப்படம் பார்வையாளர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டது இந்த திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு அனுபவமாக இருக்கும். அற்புதமான நடிகரும், தொழில்நுட்ப கலைஞருமான ரமேஷ் அரவிந்த் உடன் இணைந்து பணிபுரிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த வாய்ப்பு.. எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் விக்யாத் இயக்குநராக அறிமுகமாவதையும் நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் விக்யாத்- உணர்வுபூர்வமான இயக்குநர். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

பல வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளரான விக்யாத் இயக்குநராக வேண்டும் என்ற தனது பத்தாண்டு கால கனவை, ‘யுவர் சின்சியர்லி ராம்’ எனும் இப்படத்தின் மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார். இந்த திரைப்படத்தை இவருடைய சொந்த நிறுவனமான சத்ய ராயலா நிறுவனம் – தி ராயலா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.