மேஜிக் பிரேம்ஸ் – லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர். சஜரீஸ் தாமஸ் தயாரிப்பில்  ஜிதின் லால் இயக்கத்தில் டோவினோ தாமஸ், கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பசில் ஜோசப், ரோகிணி, ஹரிஷ் உத்தமன், நிஸ்தர் சையத், ஜெகதீஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஏ.ஆர்.எம்’ ( மலையாளம் )

1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதை. கேரளாவில் ஹரிபுரம் கிராமத்தில் வசிக்கும்  நாயகன் டோவினோ தாமஸ்.தாத்தா ஊர் கோவிலில் இருக்கும்  அதிசய விளக்கை திருட முயன்றதால், அவரையும் ஊர் மக்கள் திருடனாகவே பார்த்து அவ்வபோது அவமானப்படுத்துகிறார்கள்

இந்நிலையில் அதிசய விளக்கு பற்றி ஆவணப்படம் எடுக்க அந்த ஊருக்கு வரும் ஹரிஷ் உத்தமன் அந்த விளக்கை திருட திட்டம் போடுவதோடு, அதை டோவினோ தாமஸ் மூலமாகவே செய்யவும் முயற்சிக்கிறார். இதே ஊரில் பணக்காரர் ஒருவரின் மகள்  நாயகி கிரித்தி ஷெட்டியை காதலிக்கிறார் நாயகன் டோவினோ தாமஸ்

ஒரு கட்டத்தில் கோவிலில் இருக்கும் சிலை போலி என தெரிந்து கொள்ளும் நாயகன் டோவினோ தாமஸ் உண்மையான விளக்கை  தேடு செல்கிறார். இறுதியில்  நாயகன் டோவினோ தாமஸ்  உண்மையான அதிசய விளக்கை  கண்டுபிடித்தாரா? இல்லையா? நாயகி கிரித்தி ஷெட்டி திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதே  ஏ.ஆர்.எம்’ ( மலையாளம் )  படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் டொவினோ தாமஸ். அப்பா, மகன், பேரன் ஆகிய மூன்று வேடங்ககளில் நடித்த்திருக்கிறார். மூன்று கதாபாத்த்திரத்திலும் நடிப்பு மற்றும் உடல்மொழி, என அனைத்தையும் வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்‌ஷ்மி என மூன்று பேரும் மூன்று காலக்கட்டங்களுக்கு ஏற்றவாறு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பசில் ஜோசப், ரோஹினி, ஹரிஷ் உத்தமன், நிஷ்தர் சையத், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்  கதைக்கேற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான் காடு , மலை மற்றும் அருவிகள் என அனைத்தையும் அழகாகவும் பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.

ஒரு அதிசய விளக்கை வைத்து கொண்டு ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜிதின் லால் வெவ்வேறு  காலக்கட்டத்திலும் கதாநாயகனுக்கு அந்த அதிசய விளக்கிற்கும் உள்ள நெருக்கத்தினை அழகாக படமாக்கியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ’ஏ.ஆர்.எம்’ ( மலையாளம் ) – அனைபார்க்க வரும் வேண்டிய ஒரு அதிசயம்

மதிப்பீடு : 3 / 5

நடிகர்கள் : டோவினோ தாமஸ், கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பசில் ஜோசப், ரோகிணி, ஹரிஷ் உத்தமன்,

இசை : திபு நினன் தாமஸ்

இயக்கம் : ஜிதின் லால்

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார்

Leave a Reply

Your email address will not be published.