யார் யாரெல்லாம் அழிக்க முடியாதோ அவர்களெல்லாம் அரக்கன் என்றும் அசுரன் என்றும் சொல்வர். அதுபோல யாரும் அழிக்க முடியாத கதாபாத்திரம் தான் காளியாட்டம் படத்தின் கதை என்கிறார் இயக்குனர் ஆதிராஜா.

வருன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் கோக்கில் கே.சத்யா கதாநாயகனாக நடிக்க வில்லனாக படத்தின் இயக்குனர் ஆதிராஜா நடித்திருக்கின்றார். கதாநாயகியாக சமீரா நடிக்க 50 புதுமுகங்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர். ஒளிப்பதிவு-எஸ்சுரேஷ் இசை -சார்லஸ் மெல்வின் பாடல்கள் -இளையகம்பன் பரணிதரன், தமிழ் ஆனந்த் எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ் நடனம் -ராபர்ட் சண்டை பயிற்சி – ஆக்ஷன் பிரகாஷ் தயாரிப்பு நிர்வாகம் – பி.வி பாஸ்கரன் மக்கள் தொடர்பு -வெங்கட் தயாரிப்பு -வருன் ஸ்டுடியோ கதை திரைக்கதை வசனம் இயக்கம் -ஆதிராஜா படத்தில் வெவ்வேறு வடிவில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன

காயத்ரி பாடிய ராஜ மோகினி நான்தானடா ராங்கு காட்டும் நீ ஆள்தானடா ….என்ற துள்ளல் இசை பாடலும் வேலு -காயத்ரி ஆகியோர் பாடிய முதல் முறை இவன் வானிலே முழு விடியலை பார்க்கிறேன் … எனும் மனதை வருடும் இனிமையான பாடலும் ஸ்ரீராம் பாடிய கோரனே அகோரனே அகாலனே திரிசூலனே…. எனும் சிவனை போற்றும் பாடலும் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என்கிறார் இசையமைப்பாளர் சார்லஸ் மெல்வின்

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன், பொருளாளர் தருண்குமார், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் என்.விஜய முரளி மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published.