சென்னை, இந்தியா— செப்டம்பர் 20, 2024 முழுமையான தொழில்நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக்கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம் சிட்டியில் தன் புத்தெழுச்சியான பயணத்தைத் 22nd September 2024 அன்று தொடங்குகிறது. ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் uStream உருவாகிறது. இந்திய சினிமாவின் புதிய யுகத்தை வரவேற்க வழிவகுப்பதாய் இது வடிவம் எடுத்திருக்கிறது.
வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டூடியோவில், கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்தக்கணத்திலேயே கண் முன் காட்சிப்படுத்த முடிகிறது. இந்த நவீன டிஜிட்டல் நுட்பத்தைக் உலகப்பதிவுகள், அக்கணத்தின் கற்பனைக்காட்சிப்படுத்துதல், செயல்திறன் பதிவு, பல மெய்நிகர் காட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் simulcam நுட்பம், கேமராவினுள்ளேயே செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் (ICVFX) கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத்துறையில் முன்னணியில் இருக்கிறது uStream.
நவீன அம்சங்கள் மற்றும் விரிவுபடுத்தக்கூடிய கட்டமைப்பு
1.9 பிக்சல் தடத்திற்கு உட்பட்ட முதன்மையான LED சுவர் 40 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டது. நேரடி 3D சூழல்களுக்காக வடிவமைக்கப்பட்ட அதிவேகத் துல்லியமான ரெண்டர் (Render) கட்டமைப்பு. 7,000 சதுர அடி பரப்பளவுடைய ஸ்டூடியோ. விரிவான கேமரா டிராக்கிங் அமைப்பு, காட்சிகளுக்கு ஏற்ற ஒளியமைப்பைப் பெறுதல், படக்காட்சிகளின் தரவுகளை உடனுக்குடன் பதிவேற்றுதல், உயர்தரப் படக்காட்சிகள் மற்றும் நிறக்கட்டமைப்புகளை விரைவாக, விருப்பத்திற்கு ஏற்ற முறையில் செயல்படுத்தும் வசதி. ஸ்டூடியோவை 20,000 சதுர அடிக்கு விரிவுபடுத்தும் திட்டம்.படத்தயாரிப்பாளர்களுக்காக, தொடக்கம் முதல் நிறைவு வரை ஒருங்கிணைந்த தயாரிப்புத் தீர்வுகளை வழங்குதல். படப்பிடிப்பிலிருந்து, எடிட்டிங் & இறுதிப்பணி வரை சீராகச் செயல்படும் உட்புற (on-site) படப்பிடிப்பிற்குப் பின்பான தயாரிப்பு அறைகள்.
விரிவுபடுத்தக்கூடிய ரெண்டர் (render) கணினிகள், மிகக்கடினமான காட்சியமைப்புகளையும் எளிதாகக் கையாள்கிற வகையில் வடிவமைக்கப்பட்ட கணிப்பொறிகள். மொபைல் LED பக்கச்சுவர்கள், நகர்த்தக்கூடிய LED வான்முக விளக்குகள் (Sky light) மற்றும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கேமரா-டிராக்கிங் அமைப்புகள். இதனால் இலகுவாகும் படத்தயாரிப்பு. திரைத்துறையின் தொலைநோக்குப்பார்வையைக் கொண்டு இயங்கும் பொறியியல் பணிமனை, தயாரிப்பு பணிச்சூழல், தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஆதரவான உபகரணக் களஞ்சியம்.உடனடி கூட்டுச்செயல்பாட்டிற்காக இணைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இணையப்பதிவேற்றச் சேமிப்பு (Cloud-Integrated Workflow) தொழில்நுட்பத்தை முன்னிலைப்படுத்துதல்.
உலகின் எந்த மூலையில் இருப்பினும், படத்தயாரிப்பாளர்கள் அன்றாடம் பதிவேற்றும் வீடியோ காட்சிகளை உடனடியாக அணுகக்கூடிய, ‘காமிராவிலிருந்து இணையச்சேமிப்பு’ (camera-to-cloud) என்ற புதியதொரு தொழில்நுட்பத்தை உருவாக்குதல். முழுமையான ஒருங்கிணைந்த இணைய அமைப்பு, தயாரிப்பு காலக்கெடுக்களை விரைவுபடுத்தி, இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், VFX குழுக்கள், மற்றும் படப்பதிவிற்குப் பிந்தைய தயாரிப்பு விற்பனையாளர்களுக்கு நேரடி ஒத்துழைப்பைச் சாத்தியமாக்குதல்.
ஸ்டூடியோவின் இணைய அடிப்படையிலான VFX மற்றும் தயார்நிலை காட்சிகள் அமைப்பு வழியாக மேம்பட்ட தீர்வை வழங்குகுதல். காட்சிகள், கோப்புகள் மற்றும் காட்சிப்படிமங்களின் பரிமாற்றத்தின் போது ஏற்படும் தாமதங்களை கணிசமாகக் குறைத்து, திரைப்படக்குழுவின் தயாரிப்புத் திறனை மேம்படுத்துதல்
பல்துறை தயாரிப்பு இடங்கள் (Versatile Production Spaces)
Leave a Reply