2028 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக இருக்கிறார் நாசர் இவருடைய மருமகன் நட்டி அரசியலில் கிங் மேக்ராக இருக்கிறார். திடீரென நாசருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவரது மகளான நாயகி அனகாவை அமைச்சராக ஆக்க முடிவு செய்கிறார்கள்.
இந்நிலையில் உலகமே இரண்டாக பிரிய ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இருக்க இதில் இந்தியா நடுநிலையாக உள்ளது, இந்த நேரத்தில் முதலமைச்சர் மகள் அனகாவிற்கு நாயகன் ஆதி அறிமுகம் கிடைக்க நட்பாக செல்லும் இவர்கள் வாழ்க்கை ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.
மறுபக்கம் பல லட்சம் கோடிகள் ஒரு ஹார்பர் கண்டெய்னரில் இருக்கிறது. இதை வெளியில் கொண்டுவர நடராஜ் ஒரு மிகப்பெரிய கலவரத்தையே உருவாக்குகிறார். ஆனால், கலவரம் எல்லை மீறி போக ராணுவம் களமிறங்குகிறது. தமிழக முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. அதோடு எதிர்பாராத விதமாக ஆதியை தீவிரவாதியாக சித்தரிக்கப்படுகிறார்.
இந்த சூழ்நிலையில் ரிபப்ளிக் நாடுகள் சென்னை தாக்கி முக்கியமான இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் முதல்வர் மற்றும் அவரது மகள் அனகாவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறார்கள். இறுதியில் நாயகன் ஆதி சென்னையில் வைத்திருக்கும் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தாரா? இல்லையா? நாசர் – அனகாவை எதிரிகள் பிடியில் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா? எனபதே ’கடைசி உலகப் போர்’ படத்தின் மீதிக்கதை.
ஆயுத பயிற்சி பெற்றவராக நடித்த்டிருக்கும் ஹிப் ஹாப் ஆதி எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதலி முன்னேற்றத்திற்காக துணை நிற்பது தனது உயிரை கொடுத்தாவது மற்றவர்களை காக்க நினைப்பது சண்டை காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பது என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.
முதலைமைச்சரின் மகளாக நடித்திருக்கும் நாயகி அனகா. கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். முதலமைச்சரின் மருமகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் படம் அடுத்த கட்ட நகர்விற்கு துணை நிற்கிறார். முதலமைச்சராக நடித்திருக்கும் நாசர் தனது அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்கிறார்.
ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
வித்யாசமான கதைகள் மூலம் அனைவரின் மனதிலும் தனி இடம் பிடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி ஒற்றுமையே பலம் என்ற கருத்தை மைய கருவாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதி காதல், உள்ளூர் அரசியல் என செல்ல இரண்டாம் பாதியில் பாசம், கருணை,போர் என படம் நகர்கிறது.
மொத்தத்தில் ’கடைசி உலகப் போர்’ – புதிய முயற்சி
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : ஹிப் ஹாப் தமிழா ஆதி, அனகா, நாசர், நட்டி நட்ராஜ், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த்,
ஒளிப்பதிவு : அர்ஜுன் ராஜா
இசை மற்றும் இயக்கம்: ஹிப் ஹாப் ஆதி
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார்
Leave a Reply