சென்னை: விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மாண்புமிகு டாக்டர் கணேசன் அவர்களுக்கு லண்டனின் சிறந்த அங்கீகாரமான ராயல் காலேஜ் ஆப் பிசினியன்ஸ் என்கிற மதிப்புமிக்க அங்கீகாரம் சு காதார பராமரிப்பு பிரிவில் அவர் ஆற்றிய மிக சிறப்பான பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.ராயல் காலேஜ் ஆப் பிசிஷியன் என்பது மருத்ததுவ துறையில் வழங்கப்படும் மதிப்புமக்க கௌரவங்களில் ஒன்றாகும். இது மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு துறையில் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் தனி நபர்கள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைத்து கௌரவிக்கும் அங்கீகாரமாகும்.
இத்தகைய அங்கீகாரமனது இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் ஒரு சிலரே பெற்றிருக்கும் நிலையில் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் அவர்களுக்கு இவ்வங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது பல்கலைக்கழகத்திற்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.இதன் மூலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகமானது அவரது ஊக்கமளிக்கும் தலைமைத்துவத்தின் மூலம் சிறந்த மருத்துவ தரத்தை நிலைநிறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகைய அங்கீகாரம் பெற்றமைக்காக வேந்தருக்கு பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர்,துணை தலைவர், துணை வேந்தர் , இணை துணை வேந்தர்,பதிவாளர், இயக்குனர்கள்,அனைத்து உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் என அனைவரும் தங்களின் மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்தனர்.
Leave a Reply