சண்முகம் கிரியேஷன்ஸ் சார்பில் பரத்வாஜ் முரளி கிருஷ்ணன், ஆனந்த கிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்ய நாராயணன் ஆகியோர் தயாரிப்பில் சாச்சி இயக்கத்தில் சதீஷ், அஜய் ராஜ், பாவல் நவகீதன், மைம் கோபி , வித்யா பிரதீப், பவா செல்லத்துரை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’சட்டம் என் கையில்’
ஏற்காடு காவல் நிலையத்தில், திமிர் பிடித்த போலீஸாக இருக்கும் பவல் நவகீதன். புகார் கொடுக்க வரும் நபர்களிடம் மோசமாக நடந்து கொள்கிறார் இதே சமயம் வேறொரு இடத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருக்க, அதை விசாரிக்கும் போலீஸ் செல்கிறார்கள்.
ஏற்காடு காட்டுப்பகுதியில் இரவு நேரத்தில் கார் ஒட்டிக் கொண்டு வரும் நாயகன் சதிஷ் எதிர்பாராத விதமாக பைக்கில் வந்த நார் மீது கார் மோதி விட நிலை தடுமாறி கீழே விழும் அந்த நபர் துடிதுடித்து இறந்து விடுகிறார். பிணத்தை தனது காரில் வைத்துக் கொண்டு, செல்ல அது இரவு நேரம் என்பதால்,போலீஸ் ஆங்காங்கே செக்கிங் வைத்துக் கொண்டு விசாரிக்கின்றனர்.
இதில்,சதீஷும் அவரது காரும் போலீஸிடம் சிக்கிக் கொள்கிறது காரையும் சதீஷையும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். காரில் பிணம் இருப்பது தெரியாமல்.காவல்நிலையத்தில்,ஈகோ பிடித்த போலீஸாக இருக்கும் பவல், சதீஷை சிக்க வைக்க நினைக்கிறார்.
மற்றொரு போலீஸாக வரும் அஜய் ராஜ் சதீஷை காப்பாற்ற நினைக்கிறார். இறுதியில் காரில் அடிபட்டு இறந்த யார்? இறந்த பெண்ணிற்கும் சதீஷுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதே ’சட்டம் என் கையில்’ படத்தின் மீதிக்கதை,
கதை நாயகனாக நடித்திருக்கும் சதிஷ் மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து பாராட்டு பெற்றிருக்கிறார் இந்த படத்திலும் தனது கதாபாத்திரத்தை மீறிய நடிப்பை வெளிப்படுத்தவில்லை . திமிர் பிடித்த போலீஸ் வேடத் தில் கசசிதமாக பொருந்தியிருக்கிறார் பவல் நவகீதன்
முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் ராஜ் யாரும் யூகிக்க முடியாத வேடத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். வித்யா பிரதீப், மைம் கோபி, பவா செல்லத்துரை என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
ஜோன்ஸ் ராபர்ட் இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். சேர்க்கிறது.
ஒரு இரவில் நடக்கும் கதையை மிகவும் விறுவிறுப்பாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சாச்சி அடுத்து என்ன நடக்கும் என்ற கோணத்திலேயே படத்தினை கொண்டு சென்று நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார் சமூகத்த்திற்கு தேவையாக கருத்தை பதிவு செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’சட்டம் என் கையில்’ நியாமான தீர்ப்பு
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : தீஷ், அஜய் ராஜ், பாவல் நவகீதன், மைம் கோபி , வித்யா பிரதீப், பவா செல்லத்துரை
இசை : ஜோன்ஸ் ராபர்ட்
இயக்கம்: சாச்சி
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா
Leave a Reply