ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரிப்பில் அருண் கே ஆர் இயக்கத்தில், மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, யாசர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆரகன்’
ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்து வரும் நாயகி கவிப்ரியாவும், நாயகன் மைக்கேல் தங்கதுரையும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். நாயகி கவிப்ரியா உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு மைக்கேலிடம் கூறுகிறார் ஆனால் மைக்கேல் சொந்தமாக தொழில் தொடங்கிய பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி விடுகிறரர்.
இந்நிலையில் யாசர் தனது உடல்நிலை முடியாத அம்மா ஸ்ரீ ரஞ்சனியை பார்த்துக் கொண்டால் மாதம் ரூ,70 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறுகிறார். இதனையடுத்து காதலனுக்கு தொழில் தொடங்க பணம் தேவை இருப்பதால் மைக்கேலிடம் கூறிவிட்டு மலைப்பிரதேசத்தில் இருக்கும் பங்களா வீட்டிற்கு வேலைக்கு செல்கிறார்.
அந்த வீட்டில் இருக்கும் பொருட்களும் மர்மம் நிறைந்தவைகளாக இருப்பதோடு, முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி அந்த வீட்டில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் நாயகி கவிபிரியா
இதே வேளையில் வயது முதிர்ந்த கலையரசி கை மற்றும் கால்கள் சங்கலியால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் நாயகி கவிபிரியா வயது முதிர்ந்த கலையரசியை சந்திக்க பல அதிர்ச்சிகரமான தகவல் கிடைக்கின்றன.
இறுதியில் நாயகி கவிபிரியா அந்த பங்களாவில் இருந்து தப்பி சென்றாரா? இல்லையா/ உடல்நிலை முடியாத ஸ்ரீ ரஞ்சனி யார்? வயது முதிர்ந்த கலையரசி யார்? என்பதே ’ஆரகன் படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரை இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் காதல், பாசம், ரொமான்ஸ் தவிர ஏதிர்மறை கதாபாத்த்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மகிழ்நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவிபிரியா மனோகரன் குழந்தை உள்ளம் கொண்டவராக எதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார். இயல்பான தோற்றம், அப்பாவிச் சிரிப்பு என மனதை கொள்ளை கொள்கிறார்.
கண்களாலே மிரட்டும் ஸ்ரீரஞ்சனி, இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். கலைராணி தனது வழக்கமான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். யாசர் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள் விவேக் – ஜெஷ்வந்த் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை கதையோடு பயணிக்க வைக்கிறது. சூர்யா வைத்தி ஒளிப்பதிவு அடர்ந்த காடுகள் மற்றும் மலை பகுதிகளை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை, பல திருப்பாங்களோடு கதையை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் அருண் கே ஆர்
மொத்தத்தில் ’ஆரகன்’ – இளமையானவன்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, யாசர்
இசை : விவேக் – ஜெஷ்வந்த்
இயக்கம் : அருண் கே ஆர்
மக்கள் தொடர்பு : ஜான்
Leave a Reply