மும்பை, இந்தியா, 07, 2024 — இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, அதன் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரான ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்தது . கல்யாண் சுப்ரமணியன் (ஒரு ஸ்டோன்பெஞ்ச் புரொடக்‌ஷன்) தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ்(Karthik Subbaraj), தொகுத்த இந்த தமிழ் ஒரிஜினல் தொடர் அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் (Ashok VeerappanBharath Muralidharan) மற்றும் கமலா அல்கெமிஸ் இயக்கத்தில், கமலா ஆல்கெமிஸ் & திவாகர் கமல் (Kamala Alchemis & Dhivakar Kamal) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. எதிர் வரவிருக்கும் இந்த டார்க் ஹ்யூமர் த்ரில்லரில் நவீன் சாந்ரா (Naveen Chandra), நந்தா (Nandha), மனோஜ் பாரதிராஜா (Manoj Bharathiraja), முத்துக்குமார் (Muthukumar), ஸ்ரீந்தா(Srinda), ஸ்ரீஜித் ரவி (Sreejith Ravi), சம்ரித் (Samrith), சூர்யா ராகவேஷ்வர் (Surya ragaveshwar), சூர்யகுமார்,(Surya kumar), தருண் மற்றும் சாஷா பரேன் (Tarun and Sasha Bharen) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளதை ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போடவிருக்கும் இந்த திரில்லர் பெருமையோடு அறிவிக்கிறது. மர்மங்கள் மற்றும் சூழ்ச்சிகள் நிறைந்த ஒன்பது எபிசோடுகளுடனான இந்த சீரீஸ் இந்தியா மற்றும்உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழிலும் மற்றும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டும் அக்டோபர் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யோகமாக ஸ்ட்ரீம் செய்யப்படவிருக்கிறது. 

இந்த ஒன்பது-எபிசோடுகளைக் கொண்ட த்ரில்லர் பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள்ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு வெறும் ₹1499 செலுத்தி, சேமிப்புவசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம்

2000 ஆண்டு கால மத்தியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட இந்த இயற்கைக்கு மாறான அதேசமயம் மனதைக் கவரும் டார்க் ஹ்யூமர் திரில்லர் காலம் நட்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடுகிறது. தங்களின் கவனக்குறைவால் ஒரு புதிரான சூழலில் சிக்கி அதிலிருந்து விடுபட போராடும் கில்லி, இறை, சாண்டி மற்றும் பாலா ஆகிய நான்கு பள்ளி நண்பர்களின் சாகச வாழ்க்கைப் பயணத்தை இது பின்தொடருகிறது. சவால் மிகுந்த சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியில் வழி நெடுக தவிர்க்க முடியாத அடையாளங்களை விட்டு, செல்லும் வழியில் கேள்விக்குரிய தேர்வுகளை மேற்கொண்டு லாகவமாக கடந்து செல்லும் அவர்களின் இந்தப் பயணம் இறுதியாக எதிர்பாராத விதமாக தன்னைத் தானே அறிந்து உணரும் பாதைக்கு அவர்களை இட்டுச்செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published.