ஜனா ஜாய் மூவீஸ் சார்பில் வடலூர் J சுதா ராஜலட்சுமி & ஜேம்ஸ் யுவன் தயாரிப்பில்  R.S. விஜய பாலா இணை இயக்கத்தில் ஆர் .எஸ் . கார்த்திக் , மனிஷாஜித் , எலிசபெத் ,சிவசங்கர் ,ஜேம்ஸ் யுவன் ,தவசி ,மணிமேகலை ,ஜாபர் ,வேல்முருகன் ,மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் அக்.18 ஆம் தேதி வெளியாக இருக்கும் ’ஆர்யமாலா’

கிராமத்தில் பெற்றோர்களுடன் வசித்து வரும் நாயகி மனிஷா ஜித் பருவ வயதை எட்டியும் பூப்படையாமல் இருக்கிறார் ஒரு சந்தர்ப்பத்தில் பள்ளிக்குச் செல்லும் இவரது தங்கை பூப்படைந்து வீட்டில் விழா எடுக்கிறார்கள் தாய் மாமாவான மாரிமுத்து மனிஷா ஜித் தங்கையை பெண் கேட்கிறார்கள். இதற்கு தாய் எலிசபெத் இளைய மகளை மனா முடித்து கொடுக்க மறுக்கிறார்.

இந்நிலையில், மனிஷாவின் கனவில் நாயகன் கார்த்திக்கை சந்திக்க  அவர் மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் ஊர் கோவில் திருவிழா வர அதற்கு கூத்துகட்ட நாயகன்  ஆர் .எஸ் . கார்த்திக் வருகிறார். நாயகி, மனிஷா கனவில் கண்ட  நாயகன்  ஆர் .எஸ் . கார்த்திக்கை நேரில் பார்த்ததும்  இருவரும் பார்வையாலேயே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் தயக்கத்தை உடைத்து தனது காதலை வெளிப்படுத்துகிறார் நாயகன் ஆர் .எஸ் . கார்த்திக். ஆனால் நாயகி மறுத்துவிடுகிறார். ஊர் கோவில் திருவிழாவின் போது  மாரிமுத்து நாயகி மனிஷாவை கொலை செய்ய திட்டம் போடுகிறார். இறுதியில் நாயகன் ஆர் .எஸ் . கார்த்திக் நாயகி மனிஷாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’ஆர்யமாலா’ படத்தின் மீதிக்கதை.

தெருக்கூத்து கலைஞராக நாயகன் ஆர்.எஸ்.கார்த்தி, இயல்பாக நடித்து இருக்கிறார். கூத்துகட்டி ஆடும் காட்சிகளில் கூடுதலாக கவனம் பெறுகிறார். கிராமத்து பெண்ணாக எதார்த்த நாயகியாக வளம் வருகிறார் மனிஷா ஜித் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். பூப்படையாததை எண்ணி கலங்கும் காட்சிகளில் நம் கண்களிலும் கண்ணீர் வர வைத்து விடுகிறார்.

மனிஷாஜித் மாமாவாக வரும் மாரிமுத்து வில்லனாக மிரட்டுகிறார். கூத்துக்கலைஞராக வரும் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், நாயகியின் அம்மாவாக வரும்  எலிசபெத், ஊர்ப்பெரியவராக வரும் தவசி , தயாரிப்பாளர் ஜேம்ஸ் யுவன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் செல்வநம்பி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு தெருக்கூத்து கலையையும் கிராமத்து அழகையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ’ஆர்யமாலா’  – கதையில் பலம் இல்லை

மதிப்பீடு : 2 / 5

நடிகர்கள்: ஆர் .எஸ் . கார்த்திக் , மனிஷாஜித் , எலிசபெத் ,சிவசங்கர் ,ஜேம்ஸ் யுவன் ,தவசி ,மணிமேகலை ,ஜாபர் ,வேல்முருகன் ,மாரிமுத்து

இசை: செல்வநம்பி

ஒளிப்பதிவு: ஜெய்சங்கர் ராமலிங்கம்

மக்கள் தொடர்பு : KSK செல்வகுமார்

Leave a Reply

Your email address will not be published.