ஆரென் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரேணுகா கிருஷ்ணசாமி தயாரிக்கும் முழு நீள நகைச்சுவை படம்தான் ” காக்கா “

இனிகோ பிரபாகர், சென்றாயன், முனீஷ் காநத், அப்புக்குட்டி. தேனி கே.பரமன், ரோஷ்மின், தான்யா, கூல் சுரேஷ், கிங்காங், செல்முருகன், மகாநதி சங்கர், திருச்சி சாதனா, மொசக்குட்டி, மணிமேகலை , கொட்டாச்சி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர்.

கெவின் டி கோஸ்டா இசையையும், தேனி கே.பரமன் , சபரீஷ் இருவரும் பாடல்களையும், எஸ்.கே.சுரேஷ்குமார் ஒளிப்பதிவையும், தினா நடன பயிற்சியையும், விஜய் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள ” காக்கா ” திரைப்படத்தை ஆரென் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரேணுகா கிருஷ்ணசாமி தயாரித்துள்ளார்.

கதை திரைக்கதை, வசனம் மற்றும் ஒருபாடல் எழுதி மூன்று முக்கிய கேரக்டர்களில் ஒன்றை தேர்வு செய்து நடித்து தமது முதல் படமாக இயக்கியுள்ள தேனி. கே. பரமன் படத்தைப்பற்றி கூறியதாவது :- ”  அக்கா தங்கை இருவரில் தங்கையை ஒருவன் காதலிப்பதாக கூறி தினமும் தொல்லை கொடுத்து வருகிறான். அவன் தொல்லையை தாங்க முடியாமல், அவனிடம்,” என் அக்காவுக்கு திருமண வேளையில் திருமணம் நின்று விட்டது. அந்த மாப்பிள்ளையை கண்டு பிடித்து என் அக்காவுக்கு திருமணம் செய்து வைத்தால், நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறுகிறாள். அதன் பிறகு நடைபெறும் நிகழ்வுகளை மக்கள் ரசித்து சிரிக்கும்படி நகைச்சுவை கலாட்டாவாக படத்தை இயக்கி இருக்கிறேன். சமீப காலமாக நகைச்சுவை படங்கள் எதுவும் வரவில்லை. மக்கள் கவலை மறந்து சிரிக்க திரைக்கதை அமைத்திருக்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விஜயமுரளி

PRO

Leave a Reply

Your email address will not be published.