ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி ப்ரொடக்‌ஷன் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில்  ஜெயபால் ஜெ இயக்கத்தில்  விக்ராந்த், ரித்விகா, ஹரிஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தீபாவளி போனஸ்’

மதுரை அருகே உள்ள நிலையூர் கிராமத்தில் வசித்து வரும் நாயகன் விக்ராந்த்  மனைவி  ரித்விகா, மற்றும் மகன் ஹரிஷ் ஆகியோருடன்  சிறிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். விக்ராந்த்  கொரியர் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலை செய்து வருகிறார். ரித்விகா, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வருகிறார்  இவர்கள் இருவருக்கும் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடததி வருகிறார்கள்.

இந்நிலையில்  தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. விக்ராந்தின் அலுவலகத்தில் தீபாவளி போனஸ் தருவதாகக் கூறி இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றனர். இதனால் மகனின் நீண்ட நாள் விருப்பமான போலீஸ் உடை, மனைவி விரும்பிய சேலை வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனையடுத்து பணத்திற்காக நண்பன் சொன்ன வேலையை செய்ய போலீஸ் வந்து  விக்ராந்த்தை கைது செய்து சிறையில் அடைகிறார்கள். மறுநாள் தீபாவளி பண்டிகை வருகிறது. இறுதியில் போலீஸ் நாயகன் விக்ராந்த்தை கைது செய்ய காரணம் என்ன? தீபாவளி போனஸ் கிடைத்ததா இல்லையா.? மனைவி – மகன்  ஆசையை நிறைவேற்றினாரா ? இல்லையா?  என்பதே  ‘தீபாவளி போனஸ்’   படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த் எதார்த்த நாயகனாக நடித்து அனைவரின் கவண் பெறுகிறார்.  உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் போனதை கண்டு வருந்துவதும் மகன்  – மனைவி ஆசையை நிறைவேற்ற போராடுவதும் மகனுக்காக காலணி வியாபாரியிடம் கெஞ்சும் காட்சிகளில் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

விக்ராந்த்  மனைவியாக நடித்திருக்கும் ரித்விகா போட்டி போட்டு நடித்திருக்கிறார். கணவருக்கு எப்படியாவது புதிய தலைக்கவசம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என அவர் போராடும் இடங்களில் கவனம் பெறுகிறார். விக்ராந்த் – ரித்விகா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஹரிஷ் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு இசையில் பாடல்கள்  கேட்டுக்கும் ரகம், பின்னணி  இசை கதைக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன் மதுரை பகுதிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.

ஏழ்மை குடும்பத்திற்கு பண்டிகை நாட்கள்  எத்தகைய வழியையும் வேதனையும் கொடுக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயபால் ஜெ  தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் கூட தங்களது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றுவதற்காக எத்தகைய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது  என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில்  ‘தீபாவளி போனஸ்’   –  கொண்டாட்டம்

மதிப்பீடு : 3 / 5

நடிகர்கள்: விக்ராந்த், ரித்விகா, ஹரிஷ்

இசை: மரியா ஜெரால்டு

இயக்கம்: ஜெயபால் ஜெ

மக்கள் தொடர்பு : சுரேஷ் சுகு  & தர்மா

Leave a Reply

Your email address will not be published.