ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் .ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, அச்யுத் குமார், சீதா ராவ் ரமேஷ் , சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், வி டி வி கணேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பிரதர்’
VIDEO
சென்னையில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான அச்யுத் குமார்- சீதா தம்பதிகளின் மகன் ஜெயம் ரவி சிறு வயதில் இருந்தே ஏன், எதற்கு, என்று கேள்வி கேட்டே இருப்பதால் பல பிரச்சனைகள் வருகிறது. இதனாலேயே அவரைச் சட்டம் படிக்க வைக்கிறார் அவருடைய அப்பா அச்யுத்குமார். ஒருநாள் குடியிருக்கும் பகுதியிலும் ஜெயம் ரவியால் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அவருடைய அப்பாவிற்கு நெஞ்சுவலி வருகிறது ஊட்டியில் குடும்பத்துடன் வசித்து வரும் ஜெயம்ரவியின் அக்கா பூமிகா,அவரைச் சரி செய்வதாகக் கூறி ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார். ஜெயம் ரவி அங்கு போனதும் அக்கா குடும்பத்துக்குள்ளும் சிக்கல்கள். வருகிறது. அதன் விளைவாக அக்கா குடும்பத்தினரை விட்டு வெளியேற வேண்டியநிலை ஏற்படுகிறது.இந்நிலையில் அக்கா குடும்பத்தைப் பிரித்த பழி ஜெயம் ரவி மீது விழுகிறது. இதனால் அனைவரும் அவரை வெறுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஜெயம்ரவி அவரது அப்பா மூலம் தான் யார் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார் இதனையடுத்து பிரிந்த அக்கா குடும்பத்தை ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார் ஜெயம்ரவி இறுதியில் அக்கா பூமிகா குடும்பத்தை ஒன்று சேர்த்தாரா? இல்லையா? என்பதே ’பிரதர்’ படத்தின் மீதிக்கதை. கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம்ரவி துறுதுறுவென இருக்கும் இளைஞராக நடித்திருக்கிறார் பொறுப்பற்ற இளைஞன் பொறுப்பான இளைஞன் என இரண்டு கதாபாத்திரத்தில் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல்,பாசம்,நடனம்,காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார் நாயகியாக நடித்து இருக்கும் பிரியங்கா மோகன், அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். சில இடங்களில் பெரிய வரவேற்புப் பெறுகிறார். நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் பூமிகா,அந்த வேடத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார்.தம்பி மீதான பாசம்,குடும்பம் மீதான அக்கறை ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துகிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மக்கா மிசி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. விவேகானந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவு ஊட்டியை அழகாக பிம்மாண்டமாக காண்பித்து இருக்கிறார். குடும்பங்களுக்குள் நடக்கும் சிறு சிறு சண்டைகளை மைய கருவாக வைத்து நகைசுவை திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எம் .ராஜேஷ் .நகைச்சுவையாகவே கொண்டு செல்வதா உணர்வுப்பூர்வமாகக் கொண்டு செல்வதா என்கிற குழப்பத்திலேயே திரைக்கதை எழுதியிருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்க்கும் எந்த விஷயமும் படத்தில் இல்லை மொத்தத்தில் ’பிரதர்’ பலவீனமான கதை மதிப்பீடு :: 2.5/5 நடிகர்கள் : ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, அச்யுத் குமார், சீதா ராவ் ரமேஷ் , சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், வி டி வி கணேஷ் இசை : ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கம் : எம் .ராஜேஷ் மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply