மைத்ரி மூவி மேக்கர்ஸ் – நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஸ்ரீ லீலா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி  இருக்கும்  ’புஷ்பா 2 : தி ரூல்’

புஷ்பா காவல் துறைக்கு எதிராக துணிச்சலான முடிவு எடுப்பதில் மூலம் செம்மரக் கடத்தல்காரர்கள் சிண்டிகேட்டின் தலைவராக முன்னேற்றுகிறார். புஷ்பாவின் செம்மரக்கட்டைகள் ஜப்பான் துறை முகத்தில் மாட்டிக்கொள்கிறது. அதனை மீட்க அங்கு செல்லும் புஷ்பா  எதிரிகளால் சுடப்பட்டு கடலில் விழுவத்தின் மூலம் படம் தொடங்குகிறது.

சித்தூர் சேஷாசலம் காடுகளில் புஷ்பா செம்மரக் கடத்தலில்  ஈடுபடுவதில் மூலம் வளர்ச்சி அடைகிறார். முழு கூட்டமும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. மறுபுறம், புஷ்பாவைத் தடுக்க எஸ்.பி. பகத் பாசில் திட்டமிடுகிறார்.

எம்.பியாக இருக்கும் ராவ் ரமேஷ் மூலம் புஷ்பாவுக்கு ஆந்திர மாநில முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது அவரது மனைவி ராஷ்மிகா புஷ்பா முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும், அதை வீட்டில் மாட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மனைவியின் ஆசைப்படி முதல்வருடன் புஷ்பா புகைப்படம் எடுக்க நினைக்கும் போது , முதலமைச்சர் புஷ்பாவை அவமானப்படுத்தி விடுகிறார்.

இதனையடுத்து புஷ்பா எம்.பியாக இருக்கும் ராவ் ரமேஷை ஆந்திர மாநிலத்திற்கு முதலமைச்சராக்க நினைக்கிறான். மறுபக்கம் ஆதாரத்துடன் புஷ்பாவை  கைது செய்ய நினைக்கிறார் எஸ் பி. பகத் பாசில் இறுதியில்  புஷ்பா ராவ் ரமேஷை முதலமைச்சராக ஆக்கினாரா? இல்லையா? ,எஸ் பி. பகத் பாசில் புஷ்பாவை கைது செய்தாரா? இல்லையா ? என்பதே ’புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் மீதிக்கதை.

புஷ்பா  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்லு அர்ஜுன் இயல்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். காதல்,ஆக்ஷன்,  ,நடனம்,  சென்டிமென்ட, என அனைத்திலும் தனி முத்திரை பதிக்கிறார். முக்கியமாக அதிரடி சண்டைக்காட்சிகளில்  மிரட்டியிருக்கிறார்

அல்லு அர்ஜுன் மனைவியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா அசததலான நடிப்பின் மூலம் தனி கவனம் பெறுகிறார். குறிப்பாக ராஷ்மிகா மந்தன்னா மற்றும் அல்லு அர்ஜூன் இடையே நடக்கும் காதல் காட்சிகள் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவாளர் மிரோஷ்லவ் புரோன்ஷெக்கின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறார்.தி

போலீஸ், அரசியல், மனைவி மற்றும் மகள் சென்டிமெட்டை ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு முழு நீள அதிரடி திரைப்படத்தை உருவாகி  இருக்கிறார் இயக்குனர் சுகுமார்  இத்திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் சிறப்பான விருந்தாக இருக்கும்.

மொத்தத்தில் ’புஷ்பா 2 : தி ரூல்’ – நெருங்க  முடியாதா நெருப்பு

மதிப்பீடு : 3.5/5

நடிகர்கள் :  அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ஸ்ரீ லீலா, ராவ் ரமேஷ், சுனில்

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

இயக்கம் : சுகுமார்

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்

Leave a Reply

Your email address will not be published.