சைகர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல், கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தூவல் ’

ஆற்றங்கரை ஒட்டிய அழகிய கிராமத்தில் வசிக்கும் மக்கள் மீன் பிடித்து வாழ்க்கை நடித்து வருகிறார்கள். மீன் பிடிப்பு இல்லாத காலங்களில் பாறைக்கு வெட்டி வைப்பது அங்குள்ள காடுகளில் இருக்கும் மிருகங்களை வேட்டையாடுவது என வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் வனத்துறை அதிகாரியான ராஜ்குமார் காடுகளுக்குள் மக்கள் வேட்டையாடுவதற்கு தடை உததவு போடுகிறார்.இதே கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனுக்கு சிறிய மீன் ஒன்று கிடைக்கிறது. அதை மண்பானையில் போட்டு பராமரிக்கிறான். ஆணால் அந்த மீன் சிறிது நேரத்திலேயே இறந்து விடுகிறது.

இதனையடுத்து அச்சிறுவன் ஆற்றில் மீன் பிடித்து வளர்க்க நினைக்கிறான். இதே வேளையில் வில்லன் சிவம் ஆற்றில் வெடிகுண்டு போட்டு மீனை பிடிக்க நினைக்கிறான். இறுதியில் சிறுவன் ஆற்றில் மீனை பிடித்தானா ? இல்லையா?  வில்லன் சிவன் ஆற்றில் வெடிகுண்டு போட்டு மீனை பித்தனா? இல்லையா? என்பதே ’தூவல் ’ படத்தின் மீதிக்கதை.

சிறுவன் முதல் படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். வனத்துறை  அதிகாரியான ராஜ்குமார் மற்றும் வில்லனாக வரும் சிவம் உள்ளிட்ட  அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் படமாசதீஷ் இசையில் பாடல்கள் கேட்கும்  ரகம்  பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. S.A. தர்வேஸ் ஒளிப்பதிவு கிராமத்து  அழகை அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறார்.

கிராமத்து மக்களின் வாழ்வியலை மையக் கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் ராஜவேல் கிருஷ்ணா சிறுவன் மீன்பிடிப்பதற்காக  எடுக்கும் முயற்சிகளை அழகாக கையாண்டு இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ’தூவல் ’ – மக்களின் வாழ்க்கை

மதிப்பீடு : 2.75/5

நடிகர்கள் : ராஜ்குமார், சாந்தா, சிவம், மாஸ்டர் நிவாஸ், இளையா, ராஜ்வேல், கிருஷ்ணா

இசை : படமாசதீஷ்

இயக்கம் : ராஜவேல் கிருஷ்ணா

மக்கள் தொடர்பு : மணவை புவன்

Leave a Reply

Your email address will not be published.